ங்கர் இயக்கத்தில் கமல் நடிக்கும் புதிய படத்துக்கு பேச்சுவார்த்தை நடைபெற்று வந்த நிலையில் தற்போது அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டு உள்ளது.

ஏற்கனவே நடித்து வெளிவந்துள்ள இந்தியன் படத்தில் ஊழலுக்கு எதிராக தியாகி வேடத்தில் நடித்துள்ள கமல், தற்போது அந்த  படத்தின் இரண்டாவது பாகமான  ‘இந்தியன்2’ என்ற படத்திலும் நடிக்க இருக்கிறார்.

சமீப காலமாக ஊழலுக்கு எதிராக குரல் கொடுத்தும், அரசியலுக்கு வருவேன் என்றும் அறிவித்துள்ள கமல், இந்தியன் 2 படத்தில் நடிப்பதின் மூலம் தனது இமேஜை பொதுமக்களிடம் மேலும் உயர்த்தும் வகையில் இந்த படம் தயாராகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த படத்தின்மூலம் 21 வருடங்களுக்குப் பிறகு ஷங்கரும், கமலும் இணைந்துள்ளனர். இந்த பிரபல . தெலுங்குத் திரைப்படத் தயாரிப்பாளர் தில் ராஜு தயாரிக்கவுள்ளார்.

தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் இந்தியன் 2 தயாராக உள்ளது.

இதுகுறித்த அறிவிப்பு தனியார் தொலைக்காட்சியில் வெளியாகும் பிக்பாஸ் தொடரின்போது கமல் அறிவிக்கக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஊழல் மற்றும் லஞ்சத்துக்கு எதிரான கமலின் இந்தியன் படம் மூன்று தேசிய விருதுகளும்,  சிறந்த நடிகருக்கான விருதை கமலுக்கு பெற்றுத்தந்தது குறிப்பிடத்தக்கது.