இந்தியன் 2 படிப்பிடிப்பு விபத்து அப்டேட் ; ஆறு பேரிடம் வாக்குமூலம் பெற்றது போலீஸ்….!

நடிகர் கமல்ஹாசன் மற்றும் இயக்குனர் ஷங்கர் தயாரிப்பில் இந்தியன் 2 படம் தயாராகி வருகிறது.

இரு நாட்கள் முன்பு யாரும் எதிர்பார்க்காத வகையில் இந்தியன் 2 படப்பிடிப்பு தளத்தில் கிரேன் விழுந்து விபத்து ஏற்பட்டது.

இந்த விபத்து பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. உதவி இயக்குனர் கிருஷ்ணா, ஆர்ட் உதவியாளர் சந்திரன், தயாரிப்பு உதவியாளர் மது ஆகியோர் இந்த விபத்தில் பலியானார்கள்.

விபத்தில் உயிரிழந்த 3 பேரின் குடும்பத்திற்கு ரூ.1 கோடி நிதியுதவி வழங்கப்படும் என நடிகர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். சினிமா தொழிலில் இருக்க வேண்டிய பாதுகாப்பு இல்லை என இந்தியன் 2 படப்பிடிப்பில் நடந்த விபத்து குறித்து செய்தியாளர் சந்திப்பில் நடிகர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து நசரத்பேட்டை போலீசார் லைகா நிறுவனம் கிரேன் ஆபரேட்டர் ராஜன், கிரேன் உரிமையாளர் மற்றும் தயாரிப்பு மேனேஜர் ஆகியோர் மீது வழக்குப் பதிவு செய்தனர்.

இந்த நிலையில் சென்னை காவல் ஆணையரகத்தில் உள்ள மத்திய குற்றப்பிரிவு அலுவலகத்தில் படப்பிடிப்பின் போது பணிபுரிந்த 6 பேரிடம் நேரில் அழைத்து விசாரணை நடத்தப்பட்டது.

அரங்கு அமைத்த மேலாளர் கிரேன் ஊழியர்கள் என 6 பேரிடமும் விசாரணை நடத்தி வாக்குமூலம் பெற்றுள்ளனர். இதன் பின்னர் நடிகர் கமல் , இயக்குநர் சங்கர் உள்ளிட்ட இந்தியன் 2 பட குழுவினரிடம் விசாரணை நடத்த மத்திய குற்றபிரிவு போலீசார் முடிவு செய்துள்ளனர்.