இந்தியன்-2 படப்பிடிப்பு விபத்து: லைகா நிறுவனம், நடிகர் கமல்ஹாசன் இரங்கல்…

சென்னை:

டிகர் கமல்ஹாசன் நடித்து வரும் இந்தியன்-2 படப்பிடிப்பில் நடைபெற்ற விபத்தில் உதவி இயக்குனர்கள் 3 பேர் பலியானா நிலையில், நடிகர் கமலஹாசன், படத்தயாரிப்பு நிறுவனமான லைகா  இரங்கல்கள் தெரிவித்து உள்ளது.

இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் நடிகர் கமலஹாசன் நடித்து வரும்  ‘இந்தியன் 2’ படத்தின் படப்பிடிப்பு பூந்தமல்லி அருகே உள்ள  ஈவிபி பிலிம் சிட்டியில்  நடைபெற்று வருகிறது.  நேற்று இரவு படப்பிடிப்பு நடைபெற்றுக்கொண்டிருந்தபோது,  சுமார் 150 அடி உயரத்தில் இருந்து படத்தை சூட் செய்துகொண்டிருந்தபோது, எதிர்பாராதவிதமாக அந்த கிரேன் உடைந்து விபத்து ஏற்பட்டது.

இந்த விபத்தில் கீரேனின் உயரத்தில் இருந்து  கீழே விழுந்ததில் மூன்று பேர் பலியானார்கள்.  மேலும் அப்போது படப்பிடிப்பு தளத்தில் இருந்த ஊழியர்கள் 10க்கும் மேற்பட்டோர் மீது கிரேன் விழுந்ததில் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த கோர விபத்தில் உதவி இயக்குனர்கள் 3 பேர் உயிரிழந்தனர்.

இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து இரங்கல் தெரிவித்துள்ள லைக்கா நிறுவனம், இந்தியன்-2 படப்பிடிப்பின்போது ஏற்பட்ட எதிர்பாராமல் நடைபெற்ற இந்த விபத்துக்காக தங்களது துயரத்தைத்தெரிவித்துக்கொள்கிறோம்… இந்த விபத்தில் உதவி இயக்குனர் கிருஷ்ணா,  உதவி கலை இயக்குனர் சந்திரன், நிர்வாக உதவியாளர் மது ஆகிய  திறமையான 3 டெக்னிஷியன்கள் இழந்துள்ளோம்… அவகளை இழந்து வாடும் அவர்களின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக் கொள்கிறோம், அவர்களது ஆன்மா சாந்தியடையட்டும்  என்று கூறி உள்ளது.

விபத்து  குறித்து தனது டிவிட்டர் பக்கத்தில் இரங்கல் தெரிவித்துள்ள நடிகர் கமலஹாசன் ‘ எத்தனையோ விபத்துக்களை சந்தித்து, கடந்திருந்தாலும் இன்றைய விபத்து மிகக் கொடூரமானது. மூன்று சகாக்களை இழந்து நிற்கிறேன்.எனது வலியை விட அவர்களை இழந்த குடும்பத்தினரின் துயரம் பன்மடங்கு இருக்கும். அவர்களில் ஒருவனாக அவர்களின் துயரத்தில் பங்கேற்கிறேன்.அவர்களுக்கு என் ஆழ்ந்த அனுதாபங்கள்’ என்று கூறியுள்ளார்.

மேலும் ‘ மருத்துவமனையில் விபத்தில் சிக்கியவர்களை பார்த்து மருத்துவர்களிடம் பேசியுள்ளேன். முதலுதவி வழங்கப்பட்டு உரிய சிகிச்சைக்கான வேலைகள் நடக்கிறது. இவர்கள் விரைவாக உடல் நலம் பெற்றிடுவார்கள் என்ற நம்பிக்கையுடனே இந்த இரவு விடியட்டும்.’ என்றும் தெரிவித்துள்ளார்.

நடிகர் பார்த்திபன் வெளியிட்டுள்ள டிவிட்டர் இரங்கலில்,

கனவு தகர்ந்த மூவர், இந்தியன் 2 படப்பிடிப்பு தளத்தில் நடந்த இந்த எதிர்பாராத விபத்தால், மூன்று பேரி பரிதாபமாக பலியான செய்தி அறிந்த நடிகரும் இயக்குநருமான பார்த்திபன், “அறுந்து விழுந்த கிரேன், கனவு தகர்ந்த மூவர். ஆனால் அவர்களின் குடும்பங்களும் நண்பர்களும்,திரு சங்கரும், கமல் சாரும் நிலைக் குலைந்தே போயிருப்பார்கள்.RIP!” என தனது இரங்கலை தெரிவித்துள்ளார்.