எனது கடைசிப் படம் இந்தியன் 2 :கமல் அறிவிப்பால் ரசிகர்கள் அதிர்ச்சி

கொச்சி

ந்தியன் 2 தனது கடைசிப்படம் என கமலஹாசன் அறிவித்துள்ளது ரசிகர்களுக்கு அதிர்ச்சியை அளித்துள்ளது.

கடந்த 1996 ஆம் ஆண்டு வெளிவந்து மாபெரும் வெற்றி அடைந்த தமிழ்ப்படம் இந்தியன். இந்தப் படத்தை ஷங்கர் இயக்கி இருந்தார். தமிழில் மட்டுமின்றி தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளிலும் டப் செய்யப்பட்டு இந்தப் படம் வெற்றிவாகை சூடியது. இந்தப் படத்தில் கமலஹாசன் இரு வேடங்களில் நடித்திருந்தார்.

தற்போது ஷங்கர் இந்தியன் படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்க உள்ளார். இதில் கமாஹாசன் ஜோடியாக காஜல் அகர்வால் நடிக்கிறார். கமலஹாசன் இந்தப் படத்தை அடுத்து தேவர்மகன் 2 படத்தில் நடிக்க உள்ளதாக தெரிவித்திருந்தார். இன்று கேரளாவில் நிகழ்வு ஒன்றில் பங்கேற்க வந்த கமலஹசன் செய்தியாலர்களை கொச்சியில் சந்தித்து பேசினார்.

கமலஹாசன், “வரும் நாடாளுமன்ற தேர்தலில் மக்கள் நீதி மய்யம் கட்சி வேட்பாளர்க்ள் அனைத்து தொகுதியிலும் போட்டியிடுவார்கள். என் நடிப்பில் வெளியாகும் கடைசிப்படம் இந்தியன் 2 ஆகும். நான் அந்த படத்துடன் நடிப்புக்கு முழுக்கு போட்டுவிட உத்தேசித்துள்ளேன்.

இந்தப் படத்தின் படப்பிடிப்பு இந்த மாதம் 14 ஆம்தேதி தொடங்குகிறது. நான் நடிப்பதை நிறுத்தினாலும் எனது தயாரிப்பு நிறுவனம் மூலம் தொடர்ந்து படங்களி தயாரித்து வருவேன். அத்துடன் கட்சிப் பணிகளை தவிர்த்து நான் பல சமூக நலப்பணிகளையும் மேற்கொள்ள இருக்கிறேன்.” என தெரிவித்துள்ளார்.

கமலஹாசனின் இந்த அறிவிப்பு அவருடைய ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.

1 thought on “எனது கடைசிப் படம் இந்தியன் 2 :கமல் அறிவிப்பால் ரசிகர்கள் அதிர்ச்சி

  1. Safe game….Shankar padam sign panniyaachu. Shooting and post production efforts will go on for the next 4 years…. 🙂

Leave a Reply

Your email address will not be published.