பேட்மிட்டன் வீராங்கணை பி.வி.சிந்து உலகளவில் 2ம் இடம்

டெல்லி:
உலக பேட்மிட்டன் கூட்டமைப்பின் தர வரிசை பட்டியலில் பிவி சிந்து 2ம் இடம் பிடித்துள்ளார். 21 வயதாகும் இவர் கடந்த ரியோ ஒலிம்பிக் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்றவர். சீனாவின் தய் த்சு 87,011 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளார். ஸ்பெயின் வீராங்கணை கலோரினா மெரின் 75, 664 புள்ளிகளுடன் மூன்றாம் இடத்தில் உள்ளார். சிந்து 75,759 புள்ளிகள் பெற்றுள்ளார்.

இந்திய ஓப்பன் சூப்பர் சீரிஸ் போட்டிகளில் கரோலினா மெரினை வீழ்த்தி வெற்றி கண்டதன் மூலம் சிந்து 2ம் இடத்துக்கு முன்னேறியுள்ளார். மேலும் இந்தியாவின் சாய்னா நெவால் 9வது இடத்தில் உள்ளார். மலேசியாவில் நடந்து வரும் மலேசியா ஒப்பன் சூப்பர் சீரிஸ் போட்டிகளில் நேற்று நடந்த முதல் சுற்றில் சாய்னா நெவாலும், சிந்தும் தோல்வியை தழுவியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.