டில்லி:

1,500 கோடி டாலர் மதிப்பில் 110 போர் விமானங்களை வாங்குவதற்கான நடைமுறைகளை இந்திய விமானப் படை தொடங்கியுள்ளது.

மேக் இன் இந்தியா திட்டம் மூலம் குறைந்தபட்சம் விமானங்களின் 85 சதவீத தயாரிப்பு பணி இந்தியாவில் நடந்திருக்க வேண்டும். 15 சதவீத பணிகள் கூட்டாண்மையுடன் வெளிநாட்டில் நடந்திருக்க வேண்டும். என்று ராணுவ அமைச்சக இணையதளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விமானங்களில் 75 சதவீதம் தனி நபர் இருக்க¬யும், மீதமுள்ளவை இருவர் அமரும் இருக்கைகளும் இருக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்க நிறுவனங்களான லாக்ஹீடு மார்ட்டின் மற்றுமு போயிங், ஸ்வீடனின் சாப் மற்றும் பிரான்சின் டஸ்ஸால்ட் ஏவியேஷன் போன்ற முன்னணி நிறுவனங்கள் இந்த ஏலத்தில் கலந்துகொள்ளும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அனைத்து விதமான சீதோசன நிலைகள், பருவ நிலைகளில் இரவு மற்றம் பகல் நேரங்களில் பயணிக்க கூடிய வகையில் இந்த விமானங்கள் வடிவமைக்கப்படவுள்ளது. அடுத்த 10 ஆண்டுகளில் இந்தியா வசம் உள்ள 400 விமானங்களின் ஆயுட்காலம் முடிவடைகிறது. இவற்றில் பெரும்பாலும் ரஷ்யாவில் தயாரிக்கப்பட்ட எம்ஐஜி ரக விமானங்களாகும்.