ராஜஸ்தானில் இந்திய விமானப்படை விமானம் விழுந்து நொறுங்கியது: விமான உயிர் தப்பினார்
ஜோத்பூர்:
ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூர் அருகே இந்திய விமானப்படையின் மிக் 27வகைப் போர் விமானம் விழுந்து நொறுங்கியது. இந்த கோர விபத்தில் அதில் பயணம் செய்த விமானி உயிர் தப்பினார்.
ரஷ்ய தயாரிப்பான மிக் ரக விமானங்கள் இந்திய விமானப்படையில் அங்கம் வகித்து வருகின்றன. சமீப காலமாக இதுபோன்ற போர் விமானங்கள் விபத்துக்குள்ளாவது அதிகரித்து வருகிறது.
இந்நிலையில் இன்று காலை ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூர் அருகே இந்திய விமானப்படையின் மிக் 27வகைப் போர் விமானம் திடீரென விழுந்து நொறுங்கித் தீப்பிடித்தது.
விபத்து ஏற்படப்போவதை அறிந்த விமான, முன்கூட்டியே பாராசூட் மூலம் கீழே குதித்துவிட்டார். இதன் காரணமாக அவர் உயிர் தப்பினார்.
விமானம் விழுந்து நொறுங்கிய இடம் தீப்பிழம்புடன் கரும்புகை மண்டலமாகக் காட்சியளித்தது. விமானம் விழுந்ததற்கான காரணம் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.