பாகிஸ்தானுக்கு ரகசிய தகவல்களை அனுப்பிய இந்திய விமானப்படை அதிகாரி கைது

டில்லி:

பாகிஸ்தானின் ஐ.எஸ்.ஐ அமைப்புக்கு ரகசிய தகவல்கள் அனுப்பிய இந்திய விமானப்படை அதிகாரி டில்லியில் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்திய விமானப்படையில் கேப்டன் அந்தஸ்தில் பதவி வகிப்பவர் அருண் மார்வாஹா. இவரது நடவடிக்கைகளில் சந்தேகமடைந்த இந்திய உளவுத்துறை இவரை தீவிரமாக கண்காணிக்க ஆரம்பித்தது.

இவரது செல்போன் உரையாடல்கள் மற்றும் வாட்ஸ்அப் பதிவேற்றங்களை தொடர்ந்து கண்காணித்தபோது, இந்திய விமானப் படையின் ரகசிய ஆவணங்களை பாக். உளவுத்துறைக்கு வழங்கியது கண்டறியப்பட்டது.

இதையடுத்து நேற்று இவர் அதிரடியாக கைது செய்யப்பட்டார். மேலும், ஐந்து நாட்கள் போலீஸ் காவலில் வைக்கப்பட்டுள்ளார்.