Random image

நடுவானில் போர் விமானத்துக்கு எரிபொருள் நிரப்பி இந்தியா சாதனை

டில்லி:

நடுவானில் போர் விமானத்துக்கு எரிபொரும் நிரப்பி இந்திய விமானப் படை சாதனை புரிந்துள்ளது.

ரஷ்ய தொழில்நுட்பத்துடன் ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்கல் நிறுவனத்தால் தயாரிக்கப்பட்ட தேஜாஸ் விமானம் 2022-ம் ஆண்டில் விமானப்படையில் சேர்க்கப்படவுள்ளது. இந்நிலையில் வானத்தில் பறக்கும்போதே தேஜாஸ் போர் விமானத்துக்கு எரிபொருள் நிரப்பி இந்திய விமானப்படை சாதனை படைத்துள்ளது.

இந்தியப் போர் விமானத்துக்கு வானில் எரிபொருள் நிரப்பப்பட்டது இதுவே முதன்முறையாகும். ரஷ்யத் தயாரிப்பான ஐஎல் -78 எம்கேஐ ரக டேங்கர் விமானம் மூலம் தேஜாஸ் விமானத்துக்கு எரிபொருள் நிரப்பப்பட்டது.

20 ஆயிரம் அடி உயரத்தில் எரிபொருள் நிரப்பப்பட்டது. ஒரு தேஜாஸ் விமானம் தயாரிக்க ரூ.463 கோடி செலவாகும். 123 தேஜாஸ் விமானங்களை 50 ஆயிரம் கோடி ரூபாய் செலவில் இந்தியா தயாரித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.