அமெரிக்காவில் இந்திய மருத்துவர் சுட்டுக்கொலை!

--

Indian-American Doctor Shot Dead In Michigan

அமெரிக்காவின் மிச்சிகன் மாகாணத்தில் இந்திய டாக்டர் ஒருவர் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.

ஹென்ரி போர்டு மருத்துவமனையின் சிறுநீரக பிரிவில் மருத்துவராக பணியாற்றி வந்த டாக்டர் ராகேஷ் குமார் இந்தியாவைச் சேர்ந்தவராவார்.

கடந்த வியாழனன்று இவரது தந்தை தந்தை டாக்டர் நரேந்திரகுமார், ராகேஷ் குமாரை பல முறை கைபேசி மூலம் அழைத்துள்ளார். குறுஞ்செய்திகளையும் அனுப்பி உள்ளார். எதற்கும் பதில் இல்லாததால், ராகேஷ் குமார் குடியிருந்த அபார்ட்மென்டுக்கு தேடிச் சென்ற நரேந்திர குமார், அங்கும் அவரது மகனைக் காணாததால் அதிர்ச்சி அடைந்துள்ளார். பின்னர் காவல்துறையிடம் தெரிவிக்கவே, அவர்கள் ராகேஷ் குமாரைத் தேடி உள்ளனர். அப்போது, ஒதுக்குப்புறமான பகுதியில், காரின் பயணி இருக்கையில், ராகேஷ் சுட்டுக்கொல்லப்பட்டநிலையில் பிணமாக கிடப்பது தெரியவந்தது. ராகேஷின் உடலை மீட்ட போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தமது மகன் கொலை செய்யப்படும் அளவுக்கு யாருடனும் விரோதம் இல்லை என்றும், கொலைக்காரன காரணம் குறித்து தங்களுக்கே தெரியவில்லை என்றும் ராகேஷ்குமாரின் தந்தை கூறியுள்ளார்.

அமெரிக்காவில் ட்ரம்ப் அதிபரான பிறகு இந்தியர்களுக்கு  எதிரான தாக்குதல் அதிகரித்து வருகிறது. இந்திய பொறியாளர் குச்சி போட்லா என்பவரை, கப்பல் படை அதிகாரி ஒருவர் நேருக்கு நேராகவே,  ‘என் நாட்டை விட்டு வெளியேறுங்கள்’ என்று கூறியபடியே அண்மையில் சுட்டுக் கொன்றார். புளோரிடா மாகாணத்தில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த குடும்பத்தையே எரித்துக் கொன்ற சம்பவமும் அரங்கேறி உள்ளது. மொத்தத்தில், ட்ரம்பின் ஆட்சியில் இந்து மற்றும் சீக்கிய மதத்தினருக்கு எதிரான அச்சுறுத்தல்கள் அதிகரித்திருப்பதாகவே கூறப்படுகிறது.