வாஷிங்டன்: அமெரிக்காவில் மீண்டும் கொரோனா தொற்று பரவல் தீவிரமடைந்துள்ள நிலையில்,  கொரோனாவை கட்டுப்படுத்த புதிய அதிபராக பதவி ஏற்க உள்ள ஜோ பைடன்  மருத்துவ நிபுணர்கள் கொண்ட குழு ஒன்றை அமைத்துள்ளார்.  இந்த குழுவின் தலைவர்களில் ஒருவராக  இந்தியாவை பூர்விடமாக கொண்ட முன்னாள் சர்ஜன் ஜெனரல் டாக்டர் விவேக் மூர்த்தி இடம்பெற்றுள்ளார்.  இதற்கான ஆலோசனை குழுவில் தமிழகத்தைச் பூர்விகமாக கொண்ட மருத்துவர் செலின் கவுண்டரும் இடம்பெற்றுள்ளார்.

உலகமே எதிர்பார்த்த அமெரிக்க அதிபர் தேர்தலில், குடியரசுக் கட்சி சார்பில் போட்டியிட்ட ஜோ பைடன்,  கமலஹாரிஸ் வெற்றி பெற்றுள்ளனர். இவர்கள் 2021 ஜனவரியில் பதவி ஏற்க உள்ளனர்.

இந்த தேர்தலில் மீண்டும் அதிபர் பதவிக்கு போட்டியிட்ட டிரம்ப் தோல்வி அடைந்துள்ளார். ஆனால், அவர் தொல்வியை ஏற்க மறுத்து, வழக்குகள் தொடர்ந்து வருகிறார். முன்னதாக நாட்டில் கொரோனா தொற்று பரவலை அவர் கட்டுப்படுத்த தவறியதாக குற்றச்சாட்டுக்கள் கூறப்பட்டது. இந்த நிலையில், தற்போது தேர்தலையடுத்து மீண்டும் தொற்று பரவல் அதிகரித்து வருகிறது.  தினசரி ஒருலட்சம் பேர் பாதிக்கப்பட்டு வருகின்றனர். மொத்த பாதிப்பும் ஒரு கோடியை தாண்டியுள்ளது.

இந்த நிலையில், அதிபர் தேர்தலில் 190 வாக்குகள் பெற்று அதிபராகியுள்ள ஜனநாயகக் கட்சி வேட்பாளர் ஜோ பைடன், கொரோனாவை கட்டுப்படுத்த அவசரமாக மருத்துவ நிபுணர்கள் கொண்ட குழுவை அமைத்துள்ளர்.  இந்த  குழுவில், கடந்த  ஒபாமா ஆட்சிக்காலத்தில் முக்கியப் பொறுப்பில் இருந்த மருத்துவர் விவேக் மூர்த்தி உள்பட 2 இநதியர்கள்  இடம் பெற்றுள்ளனர். ( விவேக் மூர்த்தி இந்தியாவில் கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்தவர்)

இந்த கொரோனா தடுப்பு குழுவானது முன்னாள் சர்ஜன் ஜெனரல் டாக்டர் விவேக் மூர்த்தி, முன்னாள் அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிர்வாக ஆணையர் டாக்டர் டேவிட் கெஸ்லர் மற்றும் யேல் பல்கலைக்கழகத்தின் டாக்டர் மார்செல்லா நுனேஸ்-ஸ்மித் ஆகியோரால் வழிநடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுஉள்ளது.

மேலும்,  கொரோனா வைரஸ் ஆலோசனைக் குழுவில்,  டாக்டர் லூசியானா போரியோ, ரிக் பிரைட், டாக்டர் எசேக்கியல் இமானுவேல், டாக்டர் அதுல் கவாண்டே, டாக்டர் செலின் கவுண்டர் (தமிழக வம்சாவழியைச் சேர்ந்தவர்) டாக்டர் ஜூலி மோரிட்டா, மைக்கேல் ஓஸ்டர்ஹோம், லாய்ஸ் பேஸ், டாக்டர் ராபர்ட் ரோட்ரிக்ஸ் மற்றும் டாக்டர் எரிக் கூஸ்பி ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

பைடன் அமைத்துள்ள குழுவில் 2 தமிழகர்கள் இடம்பெற்றுள்ளது தமிழகத்திற்கு பெருமையை சேர்த்துள்ளது.

மருத்துவர் செலின் கவுண்டர் குடும்பம்