வாஷிங்டன்: இந்தாண்டு நவம்பர் மாதம் நடைபெறவுள்ள அமெரிக்க அதிபர் தேர்தலில், இந்திய வம்சாவளியினர் அளிக்கும் ஓட்டு பெரிய வித்தியாசத்தை ஏற்படுத்தும் என்றுள்ளார் ஜனநாயக கட்சியின் பிரமுகர் தாமஸ் பெரஸ்.
அமெரிக்க அதிபர் தேர்தலில், செல்வாக்கு மிக்க சிறுபான்மை இந்திய வம்சாவளி சமூகத்தை வளைப்பதில், ஜனநாயகக் கட்சி மற்றும் குடியரசுக் கட்சி ஆகிய 2 கட்சிகளுமே ஆர்வம் காட்டி வருகின்றன.
இந்நிலையில், ஒரு பிரச்சார நிகழ்ச்சியில் கலந்துகொண்ட ஜனநாயகக் கட்சியின் பிரமுகர் தாமஸ் பெரஸ், “இந்திய-அமெரிக்கர்களின் வாக்குகள் இந்தாண்டு நடைபெறவுள்ள அதிபர் தேர்தலில், உண்மையாகவே, பெரிய வித்தியாசத்தை ஏற்படுத்தும்.
மிச்சிகன் மாகாணத்தில் மட்டும், மொத்தம் 125000 இந்திய வம்சாவளி வாக்காளர்கள் உள்ளனர். கடந்த 2016ம் ஆண்டு நடைபெற்ற அதிபர் தேர்தலில், மிச்சிகன் மாகாணத்தை நாங்கள் 10700 வாக்குகளில் இழந்தோம்” என்றார்.