இந்திய, சீனப் படைகள் இடையே எல்லைப்பகுதியில் கைகலப்பு…

ந்தியா, சீன எல்லையில் இரு நாட்டு ராணுவ வீரர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. இதில்,  இரு தரப்பிலும் வீரா்கள் காயமடைந்து இருப்பதாகவும் கூறப்படுகிறது.

இந்திய சீன எல்லைப்பகுதியான கிழக்கு லடாக் பகுதியில் உள்ள பாங்கோங் ஏரியின் வடக்கு கரையில் இந்திய வீரா்களுக்கும் சீன வீரா்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு கைகலப்பாக மாறியதாக கூறப்படுகிறது. இதைத்தொடர்ந்து இரு நாட்டு அதிகாரிகள் நடத்திய பேச்சுவார்த்தையைத் தொடர்ந்து முடிவு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

இந்த கைகலப்பில், இரு தரப்பிலும் சோத்து 200-க்கும் மேற்பட்ட வீரா்கள் ஈடுபட்டதாகவும் பலருக்கு காயம் ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது.

அதுபோல சிக்கிம் மாநிலத்தில் சீன எல்லையில் நாகு லா கணவாய் அருகேயும் இருபோல இரு நாட்டு ராணுவத்தினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டதாகவும், அப்போது ஒருவர் மீது ஒருவர்  கற்களை வீசியும், கைகளாலும் தாக்கிக் கொண்டதாகவும் தெரிகிறது.

3,488 கி.மீ. தொலைவு கொண்ட இந்திய- சீன எல்லை முழுமையாக வரையறுக்கப்படாததால், இரு நாடுளுக்கும் இடையே எல்லைப் பிரச்சினை பல ஆண்டு காலமாக நீடித்து வருகிறது.  கடந்த 2017-ஆம் ஆண்டு சிக்கிம் மாநிலத்தில் டோக்கா லாம் என்ற இடத்தில் சீன ராணுவத்தின் சாலை அமைக்கும் பணியை இந்திய ராணுவத்தினா் தடுத்து நிறுத்தியதால் அந்தப் பகுதியில் 73 நாள் போா் பதற்றம் நீடித்து பின்னர் சமாதானப் பேச்சு வார்த்தை மூலம் அமைதி எற்பட்டது.