அமெரிக்காவின் எச்-1பி விசா – இந்தியர்களின் ஆர்வம் அதிகரிப்பு

மும்பை: அமெரிக்காவின் எச்-1பி விசா பெறுவதற்கான விண்ணப்பங்களின் எண்ணிக்கை, கடந்த ஆண்டைவிட சற்று அதிகரித்துள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்வதற்கான நடைமுறை கடந்த ஏப்ரல் 1ம் தேதி தொடங்கியது. இந்த எச்-1பி விசா என்பது, பொதுவாக இந்திய ஐடி துறைசார்ந்த நிபுணர்களால், அமெரிக்காவில் பணிசெய்வதற்கு கோரப்படும் ஒன்றாக இருக்கிறது.

கடந்த 2 ஆண்டுகளாக இந்த விண்ணப்ப எண்ணிக்கையில் லேசான சரிவு இருந்தது. ஆனால், இந்தாண்டில் அந்த எண்ணிக்கையில் சற்று உயர்வு ஏற்பட்டுள்ளது.

டொனால்ட் ட்ரம்ப் நிர்வாகம், அமெரிக்க விசா பெறும் விதிமுறைகளை கடுமையாக்கினாலும், அமெரிக்காவிலுள்ள இந்திய தொழில்நுட்ப நிறுவனங்கள், உள்நாட்டு அமெரிக்க இளைஞர்களையே பணியமர்த்தும் போக்கு அதிகரித்தாலும், இந்தியர்களின் விசா பெறும் ஆர்வம் குறையவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

– மதுரை மாயாண்டி

You may have missed