துபாய்:

கிர்கிஸ்தான் நாட்டு ராணுவ மேஜராக கேரளாவை சேர்ந்த இந்தியர் நியமிக்கப்பட்டுள்ளார்.

கிர்கிஸ்தான் நாட்டின் வளர்ச்சிக்காக ரஃபீக் முகமது ஆற்றிய பணிகளுக்காக, அவருக்கு அந்நாட்டின் உயர் பதவியான ராணுவ மேஜர் ஜெனரல் பதவி அளிக்கப்பட்டுள்ளது.

ந்தியாவின் கேரள மாநிலம் கோழிக்கோட்டைச் சேர்ந்தவர் ஷேக் ரபிக் முகமது. ஆரம்பக் கல்வி மட்டுமே முடித்த இவர் வறுமை காரணமாக வேலை தேடி  இளம் வயதிலேயே மும்பை சென்றார். பின்னர் அங்கிருந்து பழகியவர்களின் நட்புடன்  மத்திய கிழக்கு நாடுகளுக்கு சென்றுள்ளார்.

அங்கு  அவர், சிறு சிறு தொழில்கள் செய்து முன்னேறினார். தொடர்ந்து சவுதி, ஈரான், ஐக்கிய அரபு அமீரகம், கிர்கிஸ்தான் ஆகிய நாடுகளிலும் தொழில் தொடங்கி நடத்தி வந்தார்.  அவரது குடும்பம் துபாயில் வசித்து வருகிறது.

ஈரான் நாட்டிற்காக மிகப்பெரிய எஃகு ஆலையை ரபீக் அமைத்துக்கொண்டிருந்தபோது கிர்கிஸ்தான் முன்னாள் அதிபர் குர்மன்பெக்கை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது.  அவர் மூலம் கிர்கிஸ்தான் நாட்டிற்கும் அதேபோன்ற ஆலையை அமைத்துக்கொடுத்தார். அத்துடன் கிர்கிஸ்தான் குடியுரிமையும் பெற்றார்.

அதிபர் தேர்தலில் குர்மன்பெக் வெற்றி பெற்றதும் ரபீக்கை தனது தலைமை ஆலோசகராக நியமித்தார். 5-ம் வகுப்பு படித்து முடிக்கும் முன்பே கேரளாவில் இருந்து குடிபெயர்ந்த ரபீக், சமீபத்தில் கிர்கிஸ்தான் ராணுவ மேஜர் ஜெனரலாக நியமிக்கப்பட்டார்.