புதுடெல்லி:

பால்கோட் விமானப் படை தாக்குதலுக்குப் பிறகு பாகிஸ்தான் ராணுவத்தினர் 450 முறை போர் நிறுத்த விதியை மீறியுள்ளதாகவும், இதில் 15 பேர் வரை கொல்லப்பட்டதாகவும் தெரிகிறது.

இது குறித்து ராணுவ வட்டாரங்கள் கூறும்போது, கடந்த பிப்ரவரி 26-ம் தேதி பாகிஸ்தானின் பால்கோட்டில் இந்திய விமானப்படை தாக்குதல் நடத்தி தீவிரவாத முகாம்களை அழித்தது.

அதன்பிறகு போர் நிறுத்த விதியை மீறி எல்லை தாண்டி வந்து பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் தாக்குதல் நடத்துவது அதிகரித்து வருகிறது. அவ்வாறு எல்லை தாண்டிய பாகிஸ்தானின் 15 ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.

இவ்வாறு 450 முறை போர் நிறுத்த விதியை மீறி பாகிஸ்தானர் ராணுவத்தினர் எல்லை தாண்டியுள்ளனர். செவ்வாய்க் கிழமை நடந்த ஜம்மு காஷ்மீரின் பூஞ்ச் மாவட்டத்தில் எல்லை தாண்டி வந்து பொதுமக்கள் மீது பாகிஸ்தான் ராணுவத்தினர் தாக்குதல் நடத்தியுள்ளனர்.

அதில் ஒருவர் காயமடைந்தார். ஏப்ரல் 1&ம் தேதி மட்டும் எல்லை தாண்டிய 3 பாகிஸ்தான் ராணுவ வீரர்களை இந்திய ராணுவம் சுட்டுக் கொன்றது. கடந்த 3 மாதங்களில் 55 தீவிரவாதிகள் கொல்லப்பட்டுள்ளனர் என்றனர்.