ஆக்லாந்து:

ஆக்லாந்தில் நடைபெற்ற உலக மாஸ்டர்ஸ் விளையாட்டு போட்டியில் 100 மீட்டர் ஓட்ட பந்தயத்தில் இந்தியாவை சேர்ந்த 101 வயது பாட்டி கவுர் தங்கப் பதக்கம் வென்றார். இந்திய மூத்த தடகள வீரரக்ள் வாங்கிய 17வது தங்கபதக்கம் இது என்பது குறிப்பிடத்தக்கது.

கவுர் குறிப்பிட்ட பந்தய தூரத்தை 1 நிமிடம் 14 வினாடிகளில் கடந்து வெற்றி பெற்றுள்ளார். 2009ம் ஆண்டு 100 மீட்டரில் உசேன் போல்டின் சாதனை 64.42 வினாடிகளாகும்.

நியூசிலாந்தில் 100 வயதுக்கும் மேற்ட்டவர்கள் பிரிவில் பங்கேற்றது கவுர் ஒருவரே. இவர் வேடிக்கை பார்த்த 25 ஆயிரம் பார்வையாளர்களை கவர்ந்துள்ளார். சண்டிகரில் இருந்து வந்த அதிசயம் என நியூசிலாந்து மீடியாக்கள் கவுரை புகழ்ந்துள்ளன.