டோரண்டோ,

லக குள்ளமான மாற்றுத்திறனாளிகளுக்கு இடையேயான  போட்டியில் 37 பதக்கங்களை பெற்று இந்திய வீரர்கள்  சாதனை படைத்துள்ளனர். இதில் 3 தமிழக வீரர்களும் பங்குபெற்றுள்ளனர்.

கனடாவின் டொரொண்டோவில் குள்ளமான மாற்றுத்திறனாளிகளுக்கு இடையேயான உலக அளவிலான விளையாட்டு போட்டி நடைபெற்றது.

இந்த போட்டியில் இந்தியா சார்பாக பங்கேற்ற வீரர்கள்,  37 பதக்கங்களை வென்று இந்தியாவுக்கு பெருமை சேர்த்துள்ளனர்.

கனடா டோரண்டோ நகரில், குள்ளமான மாற்றுத்திறனாளிகளுக்கான போட்டி, கடந்த  மாதம் 4-ம் தேதி முதல் 13-ம் தேதி வரை நடைபெற்றது. இந்த விளையாட்டு போட்டியில் உலகம் முழுவதும் இருந்து  24 நாடுகள் கலந்துகொண்டன.  சுமார் 400 விளையாட்டு வீரர்கள் இப்போட்டியில் பங்கு கொண்டனர்.

இந்த போட்டியில் கலந்துகொள்ள இந்தியாவில் இருந்து தமிழகத்தை சேர்ந்த 3 பேர் உள்பட 18 பேர் கொண்ட அணி சென்றது. தமிழகம்  சார்பில் மனோஜ், விவசாயி கணேசன், செல்வராஜ் என மூன்று பேர் கலந்துக்கொண்டனர்.

நடைபெற்று முடிந்த இந்த போட்டியில், இந்திய வீரர்கள் 15 தங்கம், 10 வெள்ளி, 12 வெண்கலப் பதக்கங்களை வென்றது. இதன் மூலம் இந்த போட்டியில் முதல் 10 தரவரிசையில் இந்திய அணியும் இடம் பிடித்துள்ளது.

பதக்கங்கள் பெற்ற இந்திய வீரர்களுக்கு  இந்திய விளையாட்டுத்துறை அமைச்சர் விஜய் கோயல் வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளார்.