3வது டெஸ்ட்: 451 ரன்களுக்கு ஆல் அவுட்! 5விக்கெட் வீழ்த்தி ஜடேஜா அபாரம்!

ராஞ்சி,

ந்தியா, ஆஸ்திரேலியா அணிகள் மோதும் மூன்றாவது டெஸ்ட் போட்டி நேற்று  ராஞ்சியில் தொடங்கியது. டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பேட்டிங் செய்து வருகிறது.  முதல் நாள் ஆட்ட நேர முடிவில் ஆஸ்திரேலியா அணி 299 ரன்களுக்கு 4 விக்கெட்களை இழந்து இருந்தது.

இந்த நிலையில் இரண்டாம் நாள் ஆட்டத்தை தொடங்கியது. ஸ்மித் 117 ரன்னுடனும், மேக்ஸ்வெல் 82 ரன்னுடனும் களத்தில் இறங்கினர். ஆஸ்திரேலிய அணி மதிய உணவு இடைவேளை வரை 7 விக்கெட்களை இழந்து 401 ரன்களை குவித்திருந்தது.

உணவு இடைவேளைக்கு பின் தொடர்ந்து ஆடிய ஆஸ்திரேலிய அணி 50 ரன்களை குவித்த நிலையில் மூன்று விக்கெட்களை இழந்தது. இதை தொடர்ந்து முதல் இன்னிங்சில் ஆஸ்திரேலிய அணி 451 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. கிளென் மேக்ஸ்வெல் சதமடித்தார்,  ஆஸ்திரேலிய அணியின்  கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் ஆட்டமிழக்காமல் 178

இந்திய அணி சார்பில் ஜடேஜா 5 விக்கெட்களையும், உமேஷ் யாதவ் 3 விக்கெட்களையும் வீழ்த்தினார்.

ஏற்கனவே நடைபெற்று முடிந்த இரண்டு டெஸ்ட் மேட்ச்சில் ஆளுக்கு ஒரு வெற்றி பெற்று  1-1 என்ற கணக்கில் சமநிலையில் இருக்கிறது.

 

Leave a Reply

Your email address will not be published.