டெல்லி:

ந்தியா பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையே போர் பதற்றம் நிலவி வருவதால், விமானப்படை விமானம் மற்றும் பயணிகள் விமானங்களுக்கு இடையே மோதல் ஏற்படுவதை தவிர்க்கும் வகையிலும் ஜம்மு- காஷ்மீர் உள்பட எல்லை பகுதிகளை சேர்ந்த 5 விமான நிலையங்கள் மூட மத்திய உள்துறை இன்று காலை உத்தரவிட்டிருந்தது.

தற்போது விமான நிலையங்கள் செயல்பட மத்திய விமானப் போக்குவரத்துதுறை உத்தரவிட்டு உள்ளது.

இந்தியா பாகிஸ்தான் போர்பதற்றம் காரணமாக  ஜம்மு, ஸ்ரீநகர்,  சண்டிகர், இமயலை பகுதியில் உள்ள லேக்,  அமிர்தசரஸ் நகர்களில் உள்ள பயணிகள் விமான நிலையங்களை மூட உத்தர விடப்பட்டது. மேலும் சர்வதேச விமானங்களும் வேறு பாதையில் செல்ல அறிவுறுத்தப்பட்டது.

இந்த நிலையில், தற்போது மூடப்பபட்ட விமான நிலையங்களை திறக்க மத்திய விமான போக்குவரத்து துறை உத்தரவிட்டு உள்ளது. இதன் காரணமாக விமான சேவைகள் வழக்கம் போல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.