புதுடெல்லி: வங்கதேச அணிக்கெதிராக பெரோஷா கோல்தா மைதானத்தில் நடந்துவரும் முதல் டி-20 போட்டியில், முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி, 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து வெறும் 148 ரன்கள் மட்டுமே எடுத்தது.

தற்போது 149 ரன்கள் என்ற இலக்கை நோக்கி ஆடிவரும் வங்கதேச அணி 6.3 ஓவர்களில் 1 விக்கெட்டை இழந்து 50 ரன்களை எடுத்துள்ளது.

கேப்டனாக பொறுப்பேற்ற ரோகித் ஷர்மா எடுத்தது வெறும் 9 ரன்களே. அதிகபட்சமாக ஷிகர் தவான் 41 ரன்களை எடுத்தார். ஆனால், அதற்கு அவர் செலவழித்தது 42 பந்துகள்.

ராகுல் 15 ரன்களும், ஷ்ரேயாஸ் 22 ரன்களும், பன்ட் 27 ரன்களும், க்ரூனல் பாண்ட்யா 15 ரன்களும், வாஷிங்டன் சுந்தர் 14 ரன்களும் அடித்தனர். ஆக, பேட்ஸ்மென்களைவிட பந்துவீச்சாளர்கள் சிறப்பாக செயல்பட்டுள்ளனர்.

இதில் ஒரு விசேடம் என்னவென்றால், வங்கதேச அணியில் மொத்தம் 8 பேர் பந்து வீசியுள்ளனர். போட்டி நடக்குமா? நடக்காதா? என்ற சந்தேகம் வலுவாக இருந்த டெல்லி மைதானத்திலேயே போட்டி நடைபெறுகிறது.