“பைக் பெண்மணி” வேணு பலிவால் விபத்தில் மரணம்

ஜெய்ப்பூரைச் சேர்ந்த 44 வயது பெண்மணி வேணு பலிவால்  தம்முடைய ஹர்லி டேவிட்சன் பைக்கில் மணிக்கு 180 கிலோமீட்டர் வேகத்தில் பயணம் செய்ததற்கு பெயர் பெற்றவர்.

veenu featured

அவரது தந்தையிடமிருந்து மோட்டார் வண்டி ஓட்டுவதில் அவர் பெற்ற உந்துதலால், வண்டி ஓட்ட பேராவல் கொண்டார். அடற்கு முட்டுக்கட்டை போட்ட தம்முடைய கணவரை விவாகரத்து செய்துவிட்டு, தம்முடைய கனவான வண்டி ஓட்டுவதில் மும்முரமாக இறங்கினார்.

அவரது நண்பருடன்  டீபேஷ் தன்வாருடன் சேர்ந்து, இந்திய அளவிலான பைக் பயணத்தில் ஈடுப்பட்டு இருந்தார்.

இந்நிலையில்,  மத்திய பிரதேச மாநிலம் போபால் அருகே, விதிஸா  மாவட்டத்தில் உள்ள கையாராஸ்பூரில் அவரது வண்டி சறுக்கி கீழே விழுந்ததில், அடிப்பட்டு காயமடைந்தார்.

அருகே இருந்த கையாராஸ்பூர் மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு முதலுதவி அளிக்கப்பட்டது. அதன்பின் மேல் சிகிச்சைக்காக விதிஸா மாவட்டத்தில் உள்ள ஒரு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.  அவரை பரிசோதித்த மருத்துவர்கள், அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். ஹெல்மட் அணிந்திருந்தாலும் அவரது உயிர் காக்கப் படவில்லை.

 

veeenu fea

veenu 00

veenu 0

veenu 1

 

veenu 2
veenu 4

veenu deepesh tanwar

 

 

கனவைத் தொலைத்து, வாழ்க்கையை துரத்தும் இயந்திர மனிதர்களுக்கு மத்தியில் கனவைத் துரத்தி வாழ்க்கையைத் தொலைத்துள்ள அவரது ஆத்மா சாந்தியடையட்டும்.