உலகக் குத்துச்சண்டை – இறுதிப் போட்டிக்குள் நுழைந்த இந்திய வீராங்கனை சிம்ரஞ்ஜித் கவுர்

பெர்லின்: ஜெர்மனியில் நடைபெற்றுவரும் உலகக்கோப்பை குத்துச்சண்டைப் போட்டியில், இறுதிக்கு முன்னேறியுள்ளார் இந்திய வீராங்கனை சிம்ரஞ்ஜித் கவுர்.

பெண்களுக்கான 60 கிகி எடைப்பிரிவு அரையிறுதிப் போட்டியில், உக்ரைன் வீராங்கனை மரியானாவுடன் மோதினார் சிம்ரஞ்ஜித். இப்போட்டியை 4-1 என்ற புள்ளிகள் கணக்கில் வென்று இறுதிப் போட்டிக்கு முன்னேறினார்.

அதேசமயம், பெண்களுக்கான 57 கிகி காலிறுதிப் போட்டியொன்றில், இந்தியாவின் சோனியா லாதர் 3-2 என்ற புள்ளி கணக்கில், உக்ரைன் நாட்டின் ஸ்னிசானாவை தோற்கடித்து அரையிறுதிக்கு முன்னேறினார்.

மற்றபடி, ஆண்களுக்கான +91 கிகி எடைப்பிரிவில் இந்தியாவின் சதிஷ்குமார், 57 கிகி எடைப்பிரிவில் இந்தியாவின் முகமது ஹுசாமுதீன், கெளரவ் சோலங்கி, கவிந்தர் சிங் ஆகியோர் அரையிறுதிப் போட்டிக்கு தகுதிபெற்றனர்.