ஒலிம்பிக் தகுதி குத்துச்சண்டை போட்டி – காலிறுதிக்கு முன்னேறிய இந்திய வீரர்கள்!

அம்மான்: டோக்கியோ ஒலிம்பிக்கில் ஆடுவதற்கான ஆசிய அளவிலான குத்துச்சண்டை தகுதிப்போட்டியில் 69 கிகி எடைப்பிரிவில் இந்தியாவின் விகாஸ் கிருஷ்ணனும், 81 கிகி எடைப்பிரிவில் சச்சின் குமாரும் காலிறுதிக்குள் நுழைந்தனர்.

ஜோர்டான் நாட்டில் நடந்து வருகிறது ஆசிய அளவிலான தகுதிச் சுற்றுப் போட்டிகள். இப்போட்டிகளில் அரையிறுதி வரை செல்வோர், ஒலிம்பிக்கில் பங்கேற்க டோக்கியோவிற்கும் செல்வர்.

காலிறுதியில் நுழைவதற்கான போட்டியில். இந்தியாவின் விகாஸ் கிருஷ்ணன், கிர்கிஸ்தானின் நூர்சுல்தானை 5-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி, காலிறுதிக்குள் நுழைந்தார்.

மற்றொரு போட்டியில், இந்தியாவின் சச்சிக்கு குமார், சமோவாவின், டி ஐயோபோவை 5-0 என்ற கணக்கில் தோற்கடித்து காலிறுதிக்கு தகுதிபெற்றார்.