திருச்சூர்

திருச்சூரை சேர்ந்த 14 வயது சிறுவன் நிகல் சரின் சதுரங்கத்தில் 2600 புள்ளிகளை தாண்டி புதிய சாதனை படைத்துள்ளார்.

திருச்சூரை சேர்ந்த நிகல் சரின் சதுரங்க விளையாட்டில் பல சாதனைகள் புரிந்து வருகிறார். கடந்த 2004 ஆம் வருடம் ஜூலை மாதம் 14 ஆம் தேதி பிறந்த நிகல் சரின் சதுரங்கத்தில் தனது முதல் வெற்றியை 2011-12 ஆம் வருடம் நடந்த கேரள பள்ளிகளுக்கு இடையே நடந்த போட்டியில் பெற்றார்.

அதன் பிறகு இரு முறை 11 வயதுக்குட்பட்ட சிறுவர்களுக்கான போட்டியிலும், ஒருமுறை 15 வயதுக்குட்பட்டவர்களுக்கான போட்டியிலும் சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளார். சென்ற வருடம் இவர் சிறுவர்களுக்கான கிராண்ட் மாஸ்டர் போட்டியில் வெற்று பெற்றார்.

தற்போது இவர் இந்த வருடத்துக்கான போட்டியில் கலந்துக் கொண்டுள்ளார். தற்போது நடைபெற்று வரும் தே பே சிகேமன் நிறுவன சதுரங்க கோப்பை போட்டியில் நிகல் சரின் 2598 புள்ளிகள் பெற்றார். இவருக்கு எதிராக போட்டியிட்ட முன்னாள் சாம்பியன் ஒரு போட்டியில் டிரா செய்ததால் இவருக்கு மேலும் 2 புள்ளிகள் பெற்று 2600 புள்ளிகளை அடைந்துள்ளார்.

இவ்வாறு 260 புள்ளிகள் பெற்ற மூன்றாம் இளைஞர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது. முதலில் 2600 புள்ளிகள் பெற்ற இளைஞர் அமெரிக்காவின் ஜான் புர்க் ஆவார். ஆனால் அவர் அதன் பிறகு புள்ளிகளில் பின்னடைந்ததால் அவருடைய சாதனைகள் ஏற்றுக் கொள்ளபடவில்லை.

மற்றொரு இளைஞரான சீனாவின் வெய் யீ தனது 14 வருடம் 4 மாதம் மற்றும் 30 நாட்கள் வயதில் இந்த சாதனை புரிந்துள்ளார்.

நிகல் சரின் இந்த சாதனையை தனது 14 வருடம் 10 மாதம் வயதில் புரிந்துள்ளார். எனவே தற்போது நிகல் சரின் இரண்டாம் இடத்தில் உள்ளார். இந்தியாவில் இந்த வயதில் இச்சாதனையை புரிந்த முதல் சிறுவன் இவர் என்பது குறிப்பிடத்தக்கது.