சென்னை,

மிழக அரசின் அவசர சட்டத்தில், மிருகவதை தடைச்சட்டத்தில் இருந்து காளைகள் நீக்கப்பட்டு உள்ளதாக கவர்னர் விளக்கம் தெரிவித்து உள்ளார்.

ஜல்லிக்கட்டு நடத்த வலியுறுத்தி நடைபெற்று வரும் இளைஞர்களின் தன்னெழுச்சி போராட்டம் மேலும் தீவிரமடைந்து வருகிறது. தற்போது இயற்றியுள்ள அவசர சட்டத்தை ஏற்க முடியாது என்று இளைஞர்கள் அறிவித்து உள்ளனர்.

இந்நிலையில், அவசர சட்டம் தொடர்பாக தமிழக பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர் ராவ் வெளியிட்டு உள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,

அதில், மிருகவதை தடைச்சட்டத்தில் இருந்து காளைகளுக்கு விலக்கு அளிக்கப்பட்டதால் ஜல்லிக்கட்டு  தடை உடனடியாக நீங்குகிறது. ஆகவே அவசர சட்டம் செல்லும் எனவும்,
மிருகவதை தடுப்பு அவசரச் சட்டம் மூலம் ஜல்லிக்கட்டு நடக்க உள்ளதால் தமிழகத்தில் இயல்பு நிலை திரும்பும்.

மேலும் போராட்டத்தில் இருப்பவர்கள் வீடுகளுக்கு திரும்புவார்கள் என நம்புகிறேன்.

இவ்வாறு கவர்னர் கூறியுள்ளார்.