15 ஆண்டுகளை நிறைவுசெய்கிறார் இந்திய கால்பந்து கேப்டன் சுனில் செத்ரி..!

மும்பை: இந்திய கால்பந்து அணியின் கேப்டன் சுனில் செத்ரி, சர்வதேச கால்பந்து அரங்கில் தனது 15வது ஆண்டு பயணத்தை நிறைவு செய்கிறார்.

தற்போது 35 வயதாகும் சுனில் செத்ரி, கடந்த 2005ம் ஆண்டு இந்திய கால்பந்து அரங்கில் கால்பதித்தார். இதுவரை மொத்தம் 115 போட்டிகளில் பங்கேற்றுள்ளவர் அடித்துள்ள கோல்களின் எண்ணிக்கை 72.

இதன்மூலம், தான் விளையாடும் தேசிய அணிக்காக அதிக கோல்கள் அடித்தவர்கள் பட்டியலில், உலகளவில் இரண்டாமிடத்தில் உள்ளார் சுனில் செத்ரி. முதலிடத்தில் இருப்பவர் போர்ச்சுகல் அணியின் கிறிஸ்டியானோ ரொனால்டோ. இவர் மொத்தம் 164 போட்டிகள் விளையாடி, 99 கோல்களை அடித்துள்ளார்.

இவருக்கு கடந்தாண்டு ‘ஆசியன் ஐகான்’ என்ற கெளரவம், ஏஎஃப்சி அமைப்பால் வழங்கப்பட்டது. இவர் தெலுங்கானாவின் செகுந்தரபாத்தில் பிறந்தவர்.

நேரு கோப்பை, எஸ்ஏஎஃப்எஃப் சாம்பியன்ஷிப் உள்ளிட்ட பல போட்டிகளில் இந்திய அணி வெல்வதற்கு இவர் முக்கிய காரணமாக இருந்துள்ளார்.

சுனில் செத்ரி, 15 ஆண்டுகளை நிறைவுசெய்வதையொட்டி, இந்தியக் கால்பந்து கூட்டமைப்பின் சார்பில் அவருக்கு வாழ்த்து தெரிவிக்கப்பட்டுள்ளது.