இந்திய விமான நிறுவனங்கள் விமானம் வாங்க 5000 கோடி டாலர்கள் நிதி தேவை

டில்லி

ந்திய விமான நிறுவனங்கள்   புதிய விமானங்கள் வாங்க 5000 கோடி டாலர்கள் தேவைப்படும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்தியாவில் விமானப் பயணங்கள் அதிகரித்து வருகின்றன.  அதிலும் உள்நாட்டு விமானப் பயணம் கடந்த 3 ஆண்டுகளில் 20% அதிகரித்துள்ளது.  இந்த ஆண்டு அது மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.   அத்துடன் வெளிநாட்டு விமானப் பயணங்களும் ஒவ்வொரு வருடமும் 8-10 % அதிகரித்து வருகின்றன.   இதை ஒட்டி இந்திய விமான நிறுவனங்கள் புதிய விமானங்கள் வாங்க ஆர்டர்கள் அளித்துள்ளன.

கடந்த 2014 ஆம் வருடத்தில் இருந்து இந்திய நிறுவனங்கள் 723 புதிய விமானங்கள் வாங்க ஆர்டர்கள் அளித்துள்ளன.    புதிய விமானங்களின் தேவை மேலும் அதிகரித்து வருகிறது.    மொத்தம் 1055 விமானங்கள் தேவைப்படுவதால் அவைகளை உடனடியாக வாங்கும் முயற்சியில் இந்திய விமான நிறுவனங்கள் ஈடுபட்டுள்ளன.

இந்த விமானம் தயாரிக்கும் நிறுவனங்கள் ஒவ்வொரு வருடமும் 100 விமானங்கள் வரை அளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.   எனவே முழுத் தேவைக்கான விமானங்களும் வரும் 2027 ஆம் வருடம் கிடைக்கும்.    இதனால் விமான நிறுவனங்களுக்கு 5000 கோடி அமெரிக்க டாலர்கள் நிதி தேவைப்படும்.   எனவே விமான நிறுவனங்கள் இந்த நிதியை உருவாக்க முதலீடுகளை கோரலாம் என பொருளாதார நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

இதனால் விமான நிறுவனத்தின் முதலீடுகள் அதிகரிக்கும் எனக் கூறப்ப்படுகிறது.   இந்தியாவில் விமான எரிபொருளுக்கான வரிவிகிதங்கள் அதிகம் உள்ளதால் விமான நிறுவனங்கள் அதிக லாபம் ஈட்டுவதில்லை.   அதனால் விமான நிறுவனங்களுக்கு இந்த முதலீட்டை அடைவதும் ஒரு பெரிய சவாலாக உள்ளதாக கூறப்படுகிறது.