கொரோனாவால் அமெரிக்காவில் மரணம் அடைந்த இந்தியர்

நியூ ஜெர்சி

ந்தியாவை சேர்ந்த புகழ்பெற்ற சமையல் வல்லுநர் லாயிட் கார்டோஸ் கொரோனா பாதிப்பால் நேற்று மரணம் அடைந்தார்.

மும்பையில் உள்ள பாந்திரா பகுதியில் வசித்து வந்த லாயிட் கார்டோஸ் மும்பை நகரின் பல புகழ் பெற்ற உணவு விடுதிகளில் சமையல் கலைஞராகப் பணி புரிந்துள்ளார்.  அவரது புதிய பாணியிலான இந்தியச் சமையல் அவருக்கு நல்ல புகழைப் ப்ர்று தந்தது  அதன் பிறகு அமெரிக்கா சென்ற அவர் அங்குப் பல உணவு விடுதிகளில் பணி புரிந்துள்ளார்.

அதன்  பிறகு கார்டோஸ் பாம்பே கேண்டின் என்னும் உணவகத்தை மும்பையில் தொடங்கினார்.  அதன் புகழ் அதிகரிக்கவே நியூயார்க்கிலும் அதே பெயரில் ஒரு உணவகத்தை அவர் தொடங்கி நடத்தி வந்தார்.  மேலும் சில உணவகங்களையும் அவர் தொடங்கினார்  இந்த உணவகங்கள் சமூக வலை தளங்களில் பலராலும் புகழப்பட்டது.   கார்டோஸ் சமையல் கலை குறித்து இரு புத்தகங்கள் எழுடி உள்ளார்.

கடந்த வாரம் கார்டோஸ் தனது இன்ஸ்டாகிராமில் தனக்கு ஜுரம் உள்ளதாகவும் அதனால் தான் முன்னெச்சரிக்கையாக மருத்துவமனையில் அனுமதித்துக் கொள்ளப் போவதாகவும் தெரிவித்திருந்தார்.  நியு ஜெர்சி நகரில் உள்ள மவுண்டன் சைட் மெடிகல் செண்டரில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு கொரோனா பாதிப்பு இருந்தது சோதனையில் தெரிய வந்துள்ளது.

அதையொட்டி கார்டோஸ் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளார்.  சிகிச்சை பலனின்றி அவர் நேற்று மரணம் அடைந்துள்ளார்.  இந்த தகவலை அவர் உணவு விடுதி நிர்வாகம் அறிவித்துள்ளது.  மரணம் அடைந்த கார்டோசுக்கு தாய், மனைவி மற்றும் இரு மகன்கள் உள்ளனர்.  அவருக்கு வயது 59 ஆகும்.

கார்ட்டூன் கேலரி