ராமேஸ்வரம் மீனவர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்திய இந்திய கடலோர காவல்படையினர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.  பாதிக்கப்பட்ட மீனவர் பிச்சை அளித்த புகாரின் பேரில் தமிழக கடலோர காவல்படையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

 

ராமேஸ்வரம் பகுதியை சேர்ந்த ஜெபமாலை என்பவருக்கு சொந்தமான படகில்  மீன்பிடிக்கச் சென்ற 4 மீனவர்கள் மீது , இந்திய கடற்படை கடலோ காவல்படை வீரர்கள், விசாரணை செய்துள்ளனர். அப்போது, தமிழில் பதில் அளித்த அவர்களை, இந்திய பேச வலியுறுத்தி உள்ளனர். அவர்கள் இந்தி தெரியாது என்றதால், அவர்களை தாக்கிய கடற்படை வீரர்கள், அவர்கள்மீது,   ரப்பர் குண்டுகள் நிரம்பிய துப்பாக்கியால் சுட்டனர். இதில் மீனவர்கள்  பிச்சை ஆரோக்கியம், ஜான்சன் என்ற இரண்டு மீனவர்கள் காய மடைந்தனர்.

அவர் இருவரும் ராமேஸ்வரம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதுகுறித்து பிச்சை என்ற மீனவர் கொடுத்துள்ள புகாரை தொடர்ந்து,  மீனவர்கள் மீது துப்பாக்கி சூடு நடத்தியதாக இந்திய கடலோர காவல்படையினர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

கடற்படை மறுப்பு

இந்நிலையில், மீனவர்கள் மீது  துப்பாக்கி சூடு நடத்தவில்லை என்று இந்திய கடலோர காவல்படையினர் மறுப்பு தெரிவித்து உள்ளனர்.

ராமேஸ்வரம் மீனவர்கள் மீது தாங்கள் துப்பாக்கிச்சூடு நடத்தவில்லை என்றும் எச்சரிக்கை மட்டுமே விடுத்ததாகவும் இந்திய கடலோர காவல்படை விளக்கமளித்துள்ளது.

மீனவர்களிடம் படகை நிறுத்த உத்தரவிட்ட பின்னரும் மீறியதால் எச்சரிக்கை விடுத்ததாக இந்திய கடலோர காவல்படை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை கடற்படையினர்தான் இதுபோன்ற அந்துமீறலில் ஈடுபட்டு வந்தனர். இந்நிலையில்,  தற்போது, இந்திய கடற்படையினரே இதுபோன்று இந்தியில் பேசு என்று கூறியும், ரப்பர் குண்டுகளால் தாக்கியும் உள்ளது மீனவர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.