ந்தியாவை சேர்ந்த புதிய ஸ்டார்ட்ப் நிறுவனம், தூங்குவதற்காக ரூ.1 லட்சம் சம்பதளம் தருவதாக கவர்ச்சிகரமான அறிவிப்பை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ஒவ்வொருவருக்கும் தூக்கத்தின் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கில் ‘ஸ்லீப் இன்டர்ன்ஷிப்’  என்ற  அறிவிப்பை வெளியிட்டு உள்ளதாக அந்த நிறுவனம் தெரிவித்து உள்ளது.

தற்போதைய  இயந்திர உலகில், மனிதர்களும் இயந்திரத்தனமாகவே உழைத்து வருகின்றனர். நேரம், காலம் இல்லாமலும், குறிப்பிட்ட நேரத்தில் தூங்காமலும் பணிகளை செய்து வருவதால், பல்வேறு உடல் உபாதை களுக்கு ஆளாகி வருகின்றனர்.

இந்த நிலையில், வேக்ஃபிட். (Wakefit) என்ற ஸ்டார்ட்அப் நிறுவனம் ‘ஸ்லீப் இன்டர்ன்ஷிப்’  என்ற அறிவிப்பை வெளியிட்டு உள்ளது. அதன்படி, தூங்குவதற்காக  ரூ .1 லட்சம் வழங்குவதாக உறுதி அளித்துள்ளது. ஆர்வமுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவித்து உள்ளது.

அந்த நிறுவனம் விடுத்துள்ள அறிவிப்பில்,  இந்த பணிக்கு சேருபவர்கள், தினசரி 9 மணி நேரம் சரியான முறை யில் தூங்க வேண்டும் என்றும், ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு வாரமும் என தொடர்ந்து 100 நாட்கள் தினசரி 9 மணி நேரம் சரியான முறையில் தூங்கி எழுந்தால், அவர்களுக்க இன்டர்ன்ஷிப் கட்டணமாக ரூ.1 லட்சம் வழங்கப்படும் என்று அறிவித்து உள்ளது.

Wakefit என்ற நிறுவனம் இந்த அறிவிப்பை தங்களது இணையதளத்தில் வெளியிட்டு, அழைப்பு விடுத்துள்ளது. விண்ணப்பிப்பவர்கள் வரும் 2020ம் ஆண்டு பேட்ஜில் (“sleep internship 2020 batch”)  சேர்த்துக்கொள்ளப்படுவார்கள் என்றும் கூறி உள்ளது.

இதுகுறித்து கூறிய வேக்ஃபிட்.கோவின் இயக்குநரும் இணை நிறுவனருமான சைதன்யா ராம லிங்ககவுடா, இன்றைய இளைஞர்களிடையே   “தூக்கத்தை தங்கள் வாழ்க்கையில் முன்னுரிமை யாக்குவதற்காக, இந்த அறிவிப்பை வெளியிட்டு உள்ளதாகவும், அதன் காரணமாகவே,  நாட்டின் சிறந்த ஸ்லீப்பர்களை நியமிக்க முயற்சி செய்கிறோம், அதற்காக ஸ்லீப் இன்டர்ன்ஷிப் அறிவிக்கப்பட்டு உள்ளது.

இன்றைய இளைஞர்கள்  தூக்க ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவதன் மூலம், மக்களிடையே மீண்டும்  தூக்க ஆரோக்கியத்தை மீண்டும் கொண்டுவருவதை நோக்கமாகக் கொண்டுள்ள தாகவும், இது ஒரு முன்முயற்சியே என்றும்  “இந்த முயற்சி தூக்கத்தை நம் வாழ்வில் வேலை-வாழ்க்கை சமநிலையை பராமரிப்பதில் ஒரு ஒருங்கிணைந்த பகுதியாக மாற்றுவதற்கான மற்றொரு படியாகும்” என்று ராமலிங்ககவுடா கூறினார்.

மேலும், இந்த பயிற்சியில் சேருபவர்கள் தூங்குவதற்கு சில கட்டுப்பாடுகள் உள்ளதாகவும், அதன் படி பைஜாமா அணிந்துதான் தூங்க வேண்டும் என்றும் தெரிவித்து உள்ளது. மேலும், நிறுவனம் பயிற்சியாளர்களின் தூக்க முறைகளை கண்காணிக்கும் என்றும்,  அவர்களுக்கு தேவையான ஆலோசனை வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளதுடன், பயிற்சியாளர்களின்  தூக்க அனுபவங்களை கண்காணிக்க இதுபோன்ற நிபந்தனைகள் உதவும் என்று அறிவித்து உள்ளது.

தூங்குவதில் வெறித்தனமாக ஆர்வம் கொண்ட தூங்குமூஞ்சிகள் இந்த இன்டர்ன்சிப்புக்கு விண்ணப்பிக்கலாம்…

தூக்கம் அவசியமா?

ஒவ்வொரு ஆண்டும்  மார்ச் 16-ம் தேதி, உலக தூக்க தினம் கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டு தூக்க தினத்தை முன்னிட்டு, Join the sleep world preserve your rhythms to enjoy life (உங்களுடைய வாழ்க்கையை இசை லயம் கெடாமல் அனுபவிக்க தூக்க உலகில் இணைந்துகொள்ளுங்கள்’) என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.

ஒவ்வெருவருக்கும்  தூக்கத்தின் முக்கியத்துவத்தை உணர்த்து வகையில், இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ள உலக சுகாதார நிறுவனம், இன்றைய தலைமுறையினர், எப்படி தூங்க வேண்டும், எத்தனை மணி நேரம் தூங்க வேண்டும் என்பதை தெரியாமலேயே வாழ்ந்து வருகிறார்கள் என்று தெரிவித்து உள்ளது.

இன்றைய நவீன யுகத்தில் பெரும்பாலோர், பணி செய்யும் இடங்களிலேயே தூங்கி வழிவதும், தொடர் இரவு பணி காரணமாக தங்களது வாழ்க்கையை தொலைத்து, உடல் உபாதைகளுக்கு உள்ளாகி வருவதாக எச்சரித்துள்ள சுகாதார நிறுவனம், இன்றைய இளைய தலைமுறை யினருக்கு உறக்கம் என்பதே கனவாகிப் போகும் நிலை  உருவாகி வருவதாகவும் எச்சரிக்கை செய்துள்ளது.

இதுபோன்ற தகவல்களால், தூக்கம் ஒவ்வொருவரின் ஆரோக்கியத்திற்கும் எவ்வளவு தேவை என்பதை உணர்த்தும் வகையிலேயே இதுபோன்ற அறிவிப்புகள் வெளியாகி வருகிறது….

ஒவ்வொருவரும் அவர்களது  வயதுக்கு ஏற்ப  எவ்வளவு நேரம் தூங்கலாம் ….

பச்சிளம் குழந்தைகள் – 16 முதல் 20 மணி நேரம்.

பதின்பருவத்தினர் – 9 முதல் 10 மணி நேரம்.

இளைஞர்கள் மற்றும் நடுத்தர வயதினர் – 7 முதல் 10 மணி நேரம்.

முதியவர்கள் – 8 முதல் 12 மணிநேரம்.

தூக்கம் ஒவ்வொருவருக்கும் மிக அத்தியாவசியமானது. நமது உடலிலிருக்கும் நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கவும், திசுக்களையும் செல்களையும் புத்துணர்வடையச் செய்யவும் தூக்கம் மிகவும் அவசியம்,   சரியான முறையில் தூங்கமின்மை ஏற்பட்டால், உடல், மனரீதியான பிரச்னைகளிலில் சிக்கும் வாய்ப்பு ஏற்படும் என்பது குறிப்பிடத்தக்கது.