7 மில்லியனை தாண்டிய இந்திய கொரோனா பாதிப்பு எண்ணிக்கை

டில்லி

ந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 7 மில்லியன் அதாவது 70 லட்சத்துக்கும் மேல் ஆகி உள்ளது.

இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

நேற்று வரை இந்தியாவில் 70,51,543 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

உலக அளவில் இந்தியா தற்போது மொத்த பாதிப்பில் இரண்டாம் இடத்தில் உள்ளது.

தற்போது தினசரி பாதிப்பு எண்ணிக்கை 70 ஆயிரத்துக்கும் அதிகமாக உள்ளது.

இது உலக அளவில் முதல் இடமாகும்.

இத்வரை 1,08,371 பேர் உயிர் இழந்துள்ளனார்.

இது உலக அள்வில் மூன்றாம் இடமாகும்.

இதில் சற்றே ஆறுதலாக இதுவரை 60,74,863 பேர் குணம் அடைந்துள்ளனர்.

இது உலக அளவில் மிகவும் அதிகம் ஆகும்.