உஹான் நகரில் தவிக்கும் தம்பதிகள்: நாடு திரும்ப உதவுமாறு பிரதமர் மோடிக்கு வீடியோ மூலம் வேண்டுகோள்

பெய்ஜிங்: உஹான் நகரத்தில் இருந்து தவிக்கும் இந்திய தம்பதிகள் நாடு திரும்ப உதவுமாறு வெளியிட்டுள்ள வீடியோ பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

சீனாவில் மையம் கொண்டு பரவிய கொரோனா வைரசால் இதுவரை அந்நாட்டில் மட்டும் 2000 பேர் பலியாகி இருக்கின்றனர். ஆயிரக்கணக்கானோர் கடுமையான பாதிப்பில் உள்ளனர்.

உலக நாடுகளில் இருந்து சீனா துண்டிக்கப்பட்டுள்ளது. மற்ற நாடுகளில் சுகாதார நடவடிக்கை எடுக்கப்பட்டாலும் கொரோனா பரவி இருக்கிறது. இந்நிலையில் சீனாவில் இருந்து தாயகம் திரும்ப முடியாமல் உஹான் நகரத்தில் தவிக்கும் இந்திய தம்பதிகள் பற்றிய விவரம் இப்போது வெளி வந்துள்ளது.

உத்தரப்பிரதேசத்தை சேர்ந்த தம்பதியினர் ஆஷிஷ் யாதவ், நேஹா. ஆஷிஷ் யாதவ் சீனாவின் உஹான் நகரத்தில் உள்ள பல்கலைக்கழகத்தில் பேராசிரியாராக இருக்கிறார். மனைவி நேஹா பிஎச்டி பயின்று வருகிறார்.

அண்மையில் உஹான் நகரில் உள்ள இந்தியர்களை மீட்க டெல்லியில் இருந்து விமானம் அனுப்பப்பட்டது. ஆனால் நேஹாவுக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டதால் இருவரும் அந்த விமானம் மூலம் டெல்லி திரும்ப முடியவில்லை.

இந் நிலையில் தாங்கள் வசிக்கும் அடுக்குமாடி குடியிருப்பில் யாரும் இன்றி தவித்து வருகிறோம் என்று வீடியோ வெளியிட்டுள்ளனர். அதில் அவர் பேசி இருப்பதாவது:

நமஸ்தே, என் பெயர் ஆஷிஷ் யாதவ், இது என் மனைவி நேஹா யாதவ். நான் வுஹான் டெக்ஸ்டைல் ​​பல்கலைக்கழகத்தில் இணை பேராசிரியர். எங்களை விரைவில் இங்கிருந்து வெளியேற்றுமாறு பிரதமரிடம் வேண்டுகோள் விடுக்கின்றேன் என்று கூறியிருக்கிறார்.

அவரது மனைவி நேஹா பேசியிருப்பதாவது: எங்கள் பெற்றோர் மிகவும் கவலைப்படுகிறார்கள், நாங்கள் விரைவில் வெளியேற்றப்பட வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன் என்று பேசி உள்ளார்.

ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் தனது குடியிருப்பின் பால்கனியில் இருந்து ஆஷிஷ் படம்பிடித்த 2 நிமிட வீடியோவில், பேராசிரியர் தம்பதியினர் எவ்வாறு பொருட்களை விட்டு வெளியேறுகிறார்கள் என்பதை விவரிக்கிறார்.

இன்று வானிலை மிகவும் மோசமாக இருப்பதை நீங்கள் காணலாம். நேற்று பிற்பகல் முதல் பலத்த மழை மற்றும் லேசான பனிப்பொழிவு உள்ளது. எங்கள் கட்டிடத்தில் யாரும் இல்லை.

நேற்று, என்னிடம் ஒரு சில வெற்று தண்ணீர் பாட்டில்கள் இருந்தன (அவர் பாட்டில்களைக் காட்டுகிறார்) மற்றும் என்னிடம் இருந்தது கொஞ்சம் தண்ணீர் கொடுக்கப்பட வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார்.

எனவே இன்று எனக்கு கொஞ்சம் தண்ணீர் மற்றும் இந்த உணவை இங்குள்ள அதிகாரிகள் அனுப்பியுள்ளனர். எங்களிடம் உணவு பொருட்கள் சில நாட்களுக்கு மட்டுமே உள்ளன, எனவே நான் மீண்டும் இந்திய அரசாங்கத்திடம் முறையிடுகிறேன் விரைவில் எங்களை அழைத்து செல்லவும் என்று கூறியிருக்கிறார்.