Random image

ஆஸ்திரேலியா : இந்திய கிரிக்கெட் ரசிகர்களின் அட்டகாச பாட்டு

சிட்னி

ந்திய வீரர் ரிஷப் பாண்டை வரவேற்று ஆஸ்திரேலியாவில் இந்திய ரசிகர்கள் பாடிய அட்டகாச பாட்டு வீடியோ வைரலாகி உள்ளது.

இந்திய கிரிக்கெட் அணி தற்போது ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் நடத்தி வருகிறது. இந்திய அணி தற்போது முடிந்துள்ள 3 டெஸ்ட் போட்டிகளில் இதுவரை 2 போட்டிகளிலும் ஆஸ்திரேலியா ஒரு போட்டியிலும் வென்றுள்ளது. இப்போது இறுதிப் போட்டி சிட்னியில் நடைபெற்று வருகிறது.

இன்றைய ஆட்டத்தில் முதல் இன்னிங்சில் இந்தியா 7 விக்கட் இழப்புக்கு 622 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்துள்ளது. விக்கட் கீப்பரான ரிஷன் பண்ட் இன்று ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தனது 2 ஆம் சதத்தை அடித்துள்ளார். இதனால் கிரிக்கெட் ரசிகர்கள் பெரும் உற்சாகம் அடைந்துள்ளனர். இன்றைய நிலைப்படி இந்தியா வெற்றி பெற்றாலும் அல்லது போட்டி டிராவில் முடிந்தாலும் தொட்ரை இந்தியா கைப்பற்றும் என்னும் நிலையில் உள்ளது.

கிரிக்கெட் மைதானத்தில் ரசிகர்கள் ஆங்கிலத்தில்,
எங்களுக்கு பாண்ட் கிடைத்துள்ளார்.
ரிஷப் பாண்ட்
உங்க்ளுக்கு புரியும் என எனக்கு தோன்றவில்லை
அவர் உங்களை சிக்சர் மூலம் அடிப்பார்.
உங்கள் குழந்தைகளை கவனிப்பார்
எங்களுக்கு ரிஷப் பாண்ட் கிடைத்துள்ளார்
என பாடி மகிழ்ந்துள்ளனர்.

இந்த பாடல் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

நமது வாசகர்களுக்காக இதோ அந்தப் பாடல் ;