ன்று மெகாலியில் இந்திய – இலங்கை அணிகளுக்கிடையேயான இரண்டாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி நடைபெறுகிறது. இதில் தமிழகத்தைச் சேர்ந்த வாஷிங்டன் சுந்தர் இந்திய அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.

வாஷிங்டன்

தமிழகத்தைச் சேர்ந்தவருக்கு வாஷிங்டன் என்று பெயரா என்ற கேள்வி பலரது மனதிலும் எழும்.

அதன் பின்னணியில் நெகிழ்ச்சியான சம்பவம் இருக்கிறது.

இது குறித்து வாஷிங்டனின் தந்தை எம்.சுந்தர் தெரிவிப்பதாவது. (இவரும் கிரிக்கெட்டில் மிக ஈடுபாடு உள்ளவர்.)

“சென்னை திருவல்லிக்கேணியில் நான் வசித்த தெருவிற்கு இரண்டு தெருக்கள் தள்ளி முன்னாள் ராணுவ வீரர் பி.டி.வாஷிங்டன் என்பவர் வீடு இருந்தது. அவர்தான், எனது சிறு வயது காட்பாதர்.

எனது குடும்பம் மிகவும் வறுமையானது. அவர்தான்  எனக்கு பள்ளி சீருடை, பள்ளி கட்டணம், புத்தகங்கள் எல்லாம் வாங்கிக் கொடுத்து படிக்கவைத்தார்.

அப்போது நான் மெரினா பீச்சில் நண்பர்களுடன் கிரிக்கெட் ஆடுவேன். வாஷிங்டன் தனது சைக்கிளில் என்னை பீச்சுக்கு அழைத்துச் செல்வார்.

கிரிக்கெட் விளையாட்டில் அவருக்கு ஆர்வம் அதிகம். என்னையும் ஊக்கப்படுத்தியவர் அவர்தான். அவரால்தான் நான் படிக்கவும், சிறப்பாக விளையாடவும் வாய்ப்பு அமைந்தது.

கடந்த 1999ம் வருடம் வாஷிங்டன் மறைந்துவிட்டார். அந்த வருடம்தான்  எனது மனைவி ஆண் குழந்தை பெற்றெடுத்தார். பேறுகாலத்தில் எனது மனைவி மிகவும் துன்பங்களை அனுபவித்தார்.

கடவுள் அருளால் தாயும் சேயும் நலமானார்கள். இந்து முறைப்படி குழந்தையின் காதில் ஸ்ரீநிவாசன் என பெயரை ஓதினேன். ஆனால், பி.டி.வாஷிங்டன் மீதான அன்பால் பிறகு மகனுக்கு அவர் பெயரையே சூட்டினேன்.

இன்று அந்த பெரிய மனதரின் பெயரும், என் பெயரும் இணைந்து “வாஷிங்டன் சுந்தர்”  என்று என் மகன் அழைக்கப்படுவது மிகவும் பெருமையாக இருக்கிறது” என்று நெகிழ்ச்சியுடந் சொல்கிறார் கிரிக்கெட் வீரர் வாஷிங்டனின் தந்தை, எம். சுந்தர்.