மும்பை

ந்திய ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்த உலகக் கோப்பை போட்டிக்கான இந்திய கிரிக்கெட் அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

கிரிக்கெட் ரசிகர்களிடையே மிகவும் வரவேற்பு பெற்றது உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியாகும்.    இந்த வருடத்துக்கான உலகக் கோப்பை போட்டிகளுக்கான ஓவ்வொரு நாட்டின் அணியும் அறிவிக்கப்பட்டு வருகின்றன.  இன்று காலை ஆஸ்திரேலிய அணி அறிவிக்கப்பட்டது.

தற்போது உலகக் கோப்பைக்கான இந்திய கிரிக்கெட் அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவின் அணியில் விராட் கோலி (கேப்டன்),  ரோகித் சர்மா (துணை கேப்டன்),  சேகர் தவான், கே எல் ராகுல், விஜய் சங்கர், தோனி, கேதார் ஜாதவ், தினேஷ் கார்த்திக், யுஸ்வேந்திர சாகல், குல்தீப் யாதவ், புவனேஸ்வர் குமர், ஜஸ்பிரித் பும்ரா, ஹர்திக் பாண்டியா, ரவீந்திர ஜடேஜா, மற்றும் முகமது ஷமி ஆகியோர் உள்ளனர்.

இவர்களில் விஜய் சங்கர் மற்றும் தினேஷ் கார்த்திக் ஆகியோர் தமிழ்நாட்டை சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.