நடுரோடில் முதியவரை அடித்த இந்திய கிரிக்கெட் வீரர்!!

டில்லி:

நடு ரோட்டில் முதியவரை இந்திய கிரிக்கெட் அணி வீரர் அம்பத்தி ராயுடு தாக்கிய சம்பவம் பெரும் கண்டனத்திற்கு ஆளாகியுள்ளது.

ஐதராபாத் ராஜீவ்காந்தி சர்வதேச மைதானத்திற்கு காரில் சென்ற அம்பத்தி ராயுடு, நடு ரோட்டில் முதியவர் ஒருவருடன் வாக்கு வாதத்தில் ஈடுபடுவதும், அதைத்தொடர்ந்து அவரை அடிக்கும் காட்சியும் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.

அம்பத்தி ராயுடு காரில் வேகமாக சென்றபோது முதியவர் தட்டிக்கேட்டதால் தகராறு ஏற்பட்டு கைகலப்பில் முடிந்துள்ளது. அம்பத்தி ராயுடுவின் இந்த செயலுக்கு கடும் கண்டனம் எழுந்துள்ளது. இதையடுத்து ராயுடுவுக்கு எதிராக ஐதாராபாத் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.