தனது நீண்டக் கால காதலியை மணந்தார் சஞ்ஜூ சாம்சன்!

இந்திய கிரிக்கெட் வீரர் சஞ்ஜூ சாம்சன் தனது நீண்ட கால காதலியை திடீரென திருமணம் செய்துள்ளார். ஐபிஎல் போட்டியில் ராஜஸ்தான் அணிகாக விளையாடிய சாம்சன் திருமணம் எளிமையாக குடும்பத்தார் முன்னிலையில் நடைபெற்றது.

sanjusamson_eps

கேரளாவை சேர்ந்த சஞ்ஜூ சாம்சன் 2018ம் ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் ராஜஸ்தான் ராயல் சேலஞ்ச் அணிக்காக விளையாடி வந்தார். 23 வயதான சஞ்ஜூ சாம்சன் தனது நீண்டகால காதலியான சாருலதாவை இன்று திருமணம் செய்துள்ளாஅர்.

சஞ்ஜூ சாம்சன் கல்லூரி படிக்கும் போது சாருலதாவை முதன் முதலாக சந்தித்துள்ளார். இருவரது சந்திப்பு பிற்காலத்தில் காதலில் முடிந்துள்ளது. இதனை தொடர்ந்து கோவத்தில் உள்ள ரெசார்ட்டில் இவர்களது திருமணம் எளிமையாக நடத்தப்பட்டது. சனிக்கிழமை(22-12-1018) மாலை இவர்களின் திருமண வரவேற்பு விழா நடைபெற உள்ளது.

இது குறித்து சஞ்ஜூ சாம்சன் பேசும்போது, “ எங்கள் இருவரின் குடும்பத்தில் இருந்து 30 பேர் மட்டுமே பங்கேற்று எளிமையாக இந்த திருமணம் நடைபெற்றது. நாங்கள் இருவரும் சந்தோஷமாக உள்ளோம். இருவரின் குடும்ப உறுப்பினர்களின் வாழ்த்துக்கள் எங்களுக்கு கிடைத்துள்ளது “ என தெரிவித்தார்.

சாம்சன் கிறிஸ்துவர், சாருலதா இந்து. இவர்களின் திருமணம் சிறப்பு திருமண சட்டத்தின் படி நடந்துள்ளது. சாருலதா தற்போது தனது முதுகலை பட்டப்படிப்பை படித்து வருகிறார்.

2018ம் ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் போட்டியின் போது ராஜஸ்தான் ராயல் சேலஞ்சஸ் அணியின் ஒரு பகுதியாக சாம்சன் இணைந்த போது அந்த அணியின் மதிப்பு ரூ.80 மில்லியனாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

கார்ட்டூன் கேலரி