பிரபல கிரிக்கெட் வீரர் சுரேஷ் ரெய்னா கேளிக்கை விடுதியில் கைதாகி விடுதலை

மும்பை

ந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் சுரேஷ் ரெய்னா கேளிக்கை விடுதியில் கைது செய்யப்பட்டு விடிவிக்கப்பட்டுள்ளார்.

பிரபல இந்திய கிரிக்கெட் வீரரான சுரேஷ் ரெயினா ஐபிஎல் தொடரில் இருந்து சொந்த காரணங்களுக்காக விலகினார்.  அதன்பிறகு அவர் தனது குடும்பத்துடன் தனது நேரத்தைச் செலவிட்டு வருகிறார்.  அடுத்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் நடைபெற இருந்த சர்வதேச போட்டிகளில் இருந்தும் தாம் ஓய்வு பெறப்போவதாக சுரேஷ் ரெய்னா அறிவித்திருந்தார்.

மும்பை விமான நிலையத்தில் உள்ள தனியார் கேளிக்கை விடுதியில் அனுமதிக்கப்பட்ட நேரத்தை விட அதிக நேரம் இருந்ததாக சுமார் 34 பேர் கைது செய்யப்பட்டனர்.  இவர்களில் சில பாலிவுட் பிரபலங்கள் உள்ளிட்ட பலர் இருந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.  இந்த பிரபலங்களில் கிரிக்கெட் வீரர் சுரேஷ் ரெய்னாவும் ஒருவர் ஆவார்.

கேளிக்கை விடுதியில் அனுமதிக்கப்பட்ட நேரத்தை விட அதிக நேரம் இருந்ததாலும் கொரோனா விதிகளை மீறியதாலும் சுரேஷ் ரெய்னா கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.  அதன் பிறகு சுரேஷ் ரெய்னா ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ளார்..