னிதர்கள் வசிக்காத பகுதி ஒன்றை தனக்குச் சொந்தம் என கூறி, தன்னை ராஜாவாக அறிவித்துக்கொண்டிருக்கிறார் சுயாஷ் தீட்சித் என்ற இந்தியர்.

சூடானுக்கும், எகிப்துக்கும் இடையில் எந்த நாடும் சொந்தம் கொண்டாடாத ‘பிர் தாவில்’  என்ற பெரும் நிலப்பரப்பு இருக்கிறது.   உலகிலேயே இந்த பகுதி மட்டுமே மனிதர்கள் வாழ தகுதி படைத்த,  ஆனால் யாராலும் உரிமை கோராத பகுதியாக இருக்கிறது.

இங்கு மனிதர்கள் யாரும் வசிக்கவில்லை என்றாலும், சூடானின் ராணுவமும், அங்கு இருக்கும் தீவிரவாதிகளும்  அவ்வப்போது இப்பகுதிக்குள் நுழைவது உண்டு. ஆகவே எந்த நேரத்திலும் துப்பாக்கிச் சூடு நடக்க வாய்ப்புள்ள பகுதி இது.

சுயாஷ் தீட்சித் மிகவும் முயற்சித்து சூடான் ராணுவத்திடம் அனுமதி வாங்கி அங்கு சென்றார். அந்தப் பகுதி தனக்குச் சொந்தம் என அறிவித்த அவர், தனது நாடு அது என்றும், அந்த நாட்டுக்கு தானே ராஜா என்றும் அறிவித்துள்ளார். தனது நாட்டுக்கு என்று ஒரு கொடியையும் வெளியிட்டுள்ளார்.

 

இந்த புதிய நாட்டிற்கு அவர் ‘தி கிங்கிடம் ஆப் சுயாஷ் தீட்சித்’ என்று பெயரிட்டு இருக்கிறார். இந்த நாட்டில் யார் வேண்டுமானாலும் குடிமகன் ஆகலாம்.. நிலம் வாங்கி குடியேறலாம் என்றும் அதற்கு தன்னிடம் அனுமதி வாங்க வேண்டும் என்றும் அறிவித்துள்ளார். அங்கு நிலம் வாங்கியவர்கள் உடனடியாக அங்கு செடி நட்டு தண்ணீர் விட வேண்டும் என்பது அவர் விதித்திருக்கும் சட்டம்.

கூகுள் நிறுவனத்தில் பணியாற்ரி வந்த வந்த இவர் அந்த வேலையை விட்டுவிட்டு சுயமாக ‘சாப்டினேட்டர்’ என்ற நிறுவனத்தை தொடங்கி இருக்கிறார். உலகம் சுற்றும் வாலிபனான இவர் தான் தனது நாட்டிற்கு அங்கீகாரம் பெற இருப்பதாகவும், அதற்காக ஐ.நா.வுக்கு அங்கீகாரம் கோரி கடிதம் அனுப்ப இருப்பதாகவும் தெரிவித்திருக்கிறார்.