ரூ. 7 லட்சம் அந்நிய முதலீட்டை ஈர்த்த இந்திய ராணுவ தொழிற்சாலைகள்

--

டில்லி:

இந்திய ராணுவ தொழிற்சாலைகள் 2017&18ம் ஆண்டில் ரூ. 7 லட்சம் அந்நிய நேரடி முதலீட்டை ஈர்த்துள்ளது என்று மத்திய அரசு நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளது.

2013-14, 2014-15, 2015-16ம் ஆண்டுகளில் முறையே ரூ.82 கோடி, ரூ.8 லட்சம், ரூ. 1 கோடி என்ற அடிப்படையில் அந்நிய நேரடி முதலீட்டை ராணுவ தொழிற்சாலைகள் ஈர்த்துள்ளன. ஆனால், 201617ம் ஆண்டில் இது தவறவிப்பட்டுள்ளது.

கடந்த நிதியாண்டில் நிலக்கிரி, துறைமுகம் உள்ளிட்ட 6 தொழில்கள் அந்நிய முதலீட்டை ஈர்க்க தவறியுள்ளன. இத்தகவலை வணிகம் மற்றும் தொழிற் துறை அமைச்சர் சவுத்ரி நாடாளுமன்றத்தில் அளித்துள்ள எழுத்துப்பூர்வ பதிலில் தெரிவித்துள்ளார்.

இது குறித்து மேலும் அவர் கூறுகையில்,‘‘அந்நிய முதலீடு என்பது தனியார் தொழில் துறை தொடர்பான முடிவுகளாக உள்ளது. இயற்கை வள ஆதாரத்தின் அடிப்படையில் அந்நிய நேரடி முதலீடுகளின் வருகை உள்ளது. மேலும் சந்தை அளவு, உள்கட்டமைப்பு வசதிகள், பொது முதலீட்டுக்கான சூழல், நுண் பொருளாதார ஸ்திரத்தன்மை, வெளிநாட்டு முதலீட்டாளர்களின் முடிவு போன்றவற்றை உள்ளடக்கியுள்ளது’’ என்றார்.

பல்வேறு நாடுகளில் இருந்து 70 சதவீத ராணுவ தளவாடங்களை இந்தியா இறக்குமதி செய்கிறது. கடந்த 5 ஆண்டுகளில் இல்லாத வகையில் அந்நிய நேரடி முதலீடு என்பது 3 சதவீதமாக குறைந்துள்ளது. அதாவது 4,400 கோடி டாலராக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.