சுவிட்சர்லாந்து

ற்ற நாடுகளை ஒப்பிடுகையில் இந்தியப் பணம் குறைந்த அளவிலேயே சுவிஸ் வங்கிகளில் இருப்பதாக தகவல் வந்துள்ளது.

இந்தியாவிலுள்ள கருப்புப் பணத்தின் பெரும் பகுதி சுவிஸ் வங்கிகளில் போடப்பட்டுள்ளதாக நம்பப்படுகிறது.   அந்தப் பணத்தை மீட்டு இந்தியாவுக்கு கொண்டு வருவதாக மத்திய அரசின் இடம் பெறும் கட்சிகளும் சொல்லிக்கொண்டே இருக்கின்றன.

இந்நிலையில் சுவிட்சர்லாந்தில் இருந்து வந்த அதிகாரபூர்வமற்ற தகவல் ஒன்று, சிங்கப்பூர், ஹாங்காங் போன்ற நாடுகளை விட இந்திய டிபாசிட்டுகள் கம்மியாகவே உள்ளதாக சொல்கிறது.

கடந்த 2015ஆம் ஆண்டுக் கணக்குப்படி இந்தியர்களின் பணம் சுமார் 1.2 பில்லியன் ஃப்ராங்குகள் (அதாவது ரூ. 8392 கோடிகள் மட்டுமே) சுவிஸ் வங்கிகளில் உள்ளது.   ஆனால் மற்ற நாடுகளிள் மக்கள் டிபாசிட் செய்துள்ள பணத்தைப் பற்றி அந்த தகவலில் கூறப்படவில்லை.

2003 ஆம் ஆண்டு இந்தியப் பணம் ரூ. 23,000 கோடி சுவிஸ் வங்கிகளில் இருந்ததாகாவும், படிப்படியாக குறைந்து தற்போது ரூ.8392 கோடி அளவில் வந்துள்ளதாகவும் தெரிகிறது