கச்சா எண்ணெய் இறக்குமதி அதிகரித்ததால் பொருளாதார சிக்கல் : மத்திய அமைச்சர்

டில்லி

ந்தியாவில் கச்சா எண்ணெய் இறக்குமதி அதிகரிப்பால் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளதாக மத்திய போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.

கச்சா எண்ணெயின் விலை நாளுக்கு நாள் உயர்ந்து வருகிறது.   இதன் காரணமாக பெட்ரோல் மற்றும் டீசல் விலை அதிகரித்துள்ளது.   அதன் தாக்கமாக அத்தியாவசிய பொருட்களின் விலை அதிகரித்து வருகிறது.  அத்துடன் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு கடுமையாக சரிந்து வருகிறது.

மத்திய போக்குவரத்துத் துறை அமைச்சரான நிதின் கட்கரி, “உலகில் கச்சா எண்ணெய் இறக்குமதியில் இந்தியா மூன்றாம் இடத்தில் உள்ளது.   இந்தியாவின் எண்ணெய் தேவைகளில் 80% இறக்குமதி மூலமாக பெறப்படுகிறது.

இவ்வாறு கச்சா எண்ணெய் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு குறைந்து வருகிறது.   இதனால்  இந்தியாவில் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது.” என்று தெரிவித்துள்ளார்.