ராணுவ மோதல் நடந்தால் இந்திய பொருளாதார முன்னேற்றம் பாதிக்கப்படும் : உலகவங்கி எச்சரிக்கை

டில்லி

இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே ராணுவ மோதல் நடந்தால் இந்திய பொருளாதார முன்னேற்றம் பாதிக்கப்படும் என உலக வங்கி எச்சரித்துள்ளது.

கடந்த பிப்ரவரி மாதம் 14 ஆம் தேதி பாகிஸ்தானின் தீவிரவாத இயக்கமான ஜெய்ஷ் ஈ முகமத் புல்வாமாவில் நடத்திய தற்கொலைப் படை தாக்குதலுக்கு பிறகு இரு நாட்டு ராணுவத்திடையே பரபரப்பு நிலவி வருகிறது. அதன் பிறகு நடந்த புல்வாமா தாக்குதல் மற்றும் இந்திய விமானப்படை வீரரை பாகிஸ்தான் சிறை பிடித்து விடுவித்தது போன்றவை மேலும் பரபரப்பை அதிகரித்தது.

இது இந்திய பொருளாதாரத்தில் கடும் பின்னடைவை ஏற்படுத்தியது. இதற்கு முக்கிய காரணம் போர் அபாயம் உள்ள நாட்டில் இருந்து வெலிநாட்டு முதலீடுகள் விலக்கிக் கொள்ளப்படுவதாகும். ஆனால் தற்போது நிலைமை சீரடைந்து வருகிறது. இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி குறியீடு அதிகரித்துள்ளது. இதனால் நடப்பு ஆண்டில் பொருளாதாரம் 7.5% முன்னேற்றம் அடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இது குறித்து உலக வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில், “இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே ஏற்பட்ட ராணுவ மோதல்களால் பொருளாதார வீழ்ச்சி அதிகரிரித்து தற்போது மீண்டுள்ள்து. நடப்பு ஆண்டில் இந்திய பொருளாதார வளர்ச்சி 7.5% இருக்கும் என எதிர்பார்ப்பு இருந்த போதிலும் அது நடக்குமா என்னும் சந்தேகமும் உள்ளது.

குறிப்பாக இந்தியா மற்றும் பாகிஸ்தான் ராணுவத்தினரிடையே மீண்டும் மோதல் ஏற்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. அவ்வாறு மோதல் நடந்தால் அது இந்திய பொருளாதாரத்தை பெரும் அளவில் பாதிக்கும். ஐரோப்பிய நாடுகளில் இருந்து பிரிட்டன் விலகுவதால் தெற்காசிய நாடுகளின் வர்த்தகம் பாதிக்கப்படும் சூழ்நிலை உள்ளது. எனவே பாக் – இந்தியா மோதல் நடந்தால் அது இந்திய பொருளாதாரத்துக்கு மேலும் பின்னடைவை அளிக்கும்” என தெரிவித்துள்ளது.

இந்த கட்டுரையைப் பற்றி உங்கள் கருத்துகளை பதிவு செய்யவும்


Tags: India pak military, Indian economy:, World Bank
-=-