பணமதிப்பிழப்பால் இந்திய பொருளாதாரம் உயர்வு….அருண்ஜெட்லி

டில்லி:

பணமதிப்பிழப்பால் இந்திய பொருளாதாரம் உயர்ந்துள்ளது என்று மத்திய நிதியமைச்சர் அருண்ஜெட்லி கூறியுள்ளார்.

2016-ம் ஆண்டு அறிவிக்கப்பட்ட பணமதிப்பிழப்பு அறிவிப்பு விமர்சனங்களுக்கு ஆளாகியுள்ளது. த்துக்கும் உள்ளாகி வருகிறது.பணமி மதிப்பிழப்புக்கு பின்னர் பெரும்பாலான பழைய ரூபாய் நோட்டுக்கள் வங்கிகளுக்கு திரும்பி வந்துவிட்டதாக ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. இதையடுத்து காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்கட்சிகள் மத்திய அரசை கடும் விமர்சனம் செய்துள்ளது.

‘‘பணமதிப்பிழப்பு நடவடிக்கை மக்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல்’ என்று ராகுல்காந்தி விமர்சனம் செய்துள்ளனர். இந்நிலையில் மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி இன்று கூறுகையில்,‘‘கருப்பு பணத்தை தடுப்பது, வருமான வரி தாக்கலை அதிகரிப்பதே பணமதிப்பு நீக்கத்தின் நோக்கம். பணமதிப்பிழப்பு நடவடிக்கையால் இந்திய பொருளாதாரம் உயர்ந்துள்ளது. வரி தாக்கல் செய்வோரின் எண்ணிக்கை 6.86 கோடியாக உயர்ந்திருப்பது இதற்கு சாட்சியாகும்’’ என்றார்.