ரியாத்

வுதி அரேபியாவில் இருந்து பொது மன்னிப்பில் வெளியேற தேவையான ஆவணங்கள் எவை என்பதை இந்திய தூதரகம் தெரிவித்துள்ளது.

சவுதி அரேபியாவில் சட்ட விரோதமாக குடியிருப்போருக்கு பொது மன்னிப்பு வழங்கி நாட்டை விட்டு வெளியேற உத்தரவு அளிக்க சவுதி அரசு ஒப்புக் கொண்டது.  அதன்படி பலர் வெளியேறினர்.  ஆனால் சிலருக்கு இது பற்றிய விவரங்கள் தெரியாததால் கெடு தாண்டியும் சவுதியில் உள்ளனர்.

அவர்களுக்கு கெடு நீட்டிக்கப்பட்டுள்ளது. அதன்படி இந்த மாதம் 24ஆம் தேதிக்குள் வெளியேற வேண்டும்.  அவர்கள் பொது மன்னிப்பில் வெளியேறும் உத்தரவு பெற்றுக் கொள்ள கீழ்க்கண்ட ஆவணங்கள் தேவை என இந்திய தூதரகம் அறிவித்துள்ளது.

1, பூர்த்தி செய்யப்பட்ட 2 பக்கங்கள் கொண்ட  EC Application form

2. பாஸ்போர்ட்டின் முதல் மற்றும் கடைசி பக்கத்தின் நகல்

3. புகைப்படம் ஒன்று

4. விசா / இக்காமா / பார்டர் பேப்பர் காப்பி (ஏதாவது இருந்தால்)

சரியான பாஸ்போர்ட் உள்ளவர்களூக்கு ஈசி ஃபார்ம் தேவை இல்லை.

தவறான பாஸ்போர்ட் உள்ளவர்களுக்கு ஈசி அளித்த பின் அந்த பாஸ்போர்ட் கேன்சல் ஆகி விடும்.