இந்திய தூதரகம் அலட்சியம்: சவுதியில் 11 ஆயிரம் இந்திய மாணவர்கள் தவிப்பு!

ந்திய தூதரத்தன் அலட்சியத்தால் 11 ஆயிரம் இந்திய மாணவர்கள் அவதியுறும் நிலைக்கு ஆளாகியுள்ளனர்” என்று சவுதி வாழ் இந்தியர்கள் குற்றம் சாட்டுகிறார்கள்.

சவுதியில் உள்ள சர்வதேச இந்திய பள்ளியை மூட வேண்டாம் – சுஷ்மாவிடம் உதவி கேட்கும் மாணவர்கள்

சவுதியில் இயங்கும் சர்வதேச இந்திய பள்ளியை மூட வேண்டாம் என இந்திய மாணவர்கள் சுஷ்மா சுவராஜுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

வளைகுடா நாடான சவுதி அரேபியாவில்  பல்லாயிரக்கணக்கான இந்தியர்கள் பணி நிமித்தம் தங்கியருக்கிறார்கள். இவர்களில் பலர் தங்கள் குடும்பத்தினருடன் அங்கு வாழ்கிறார்கள். இவர்களது குழந்தைகளுக்காக அங்கு இந்திய பள்ளிகள் சில செயல்படுகின்றன.

சவுதியின் முக்கிய நகரான ஜெட்டாவிலும் சர்வதேச இந்திய பள்ளி (ஐ.ஐ.எஸ்.ஜெ.) இயங்கி வருகிறது. அங்கு மாணவர் – மாணவியருக்கு தனித்தனி பள்ளிகளே இருக்க வேண்டும் என்பது சட்டம். ஆகவே, ஜெட்டா நகரில் அஜீஜியா என்ற இடத்தில் பெண்கள் பள்ளியும், ரிகாப் என்ற இடத்தில் ஆண்கள் பள்ளியும் இயங்கி வருகின்றன.

இங்கு, மத்திய அரசின் சி.பி.எஸ்.இ., பாடத் திட்டம் பயிற்றுவிக்கப்படுகிறது. தற்போது, ஆண்கள் பள்ளி இயங்கும் இடத்தை ஒப்படைக்கக்கோரி உரிமையாளர் தொடுத்த வழக்கில், பள்ளியை காலி செய்து தரவேண்டும் என்று அந்நாட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நாளை (09.10.2018) பள்ளி இடத்தை ஒப்படைக்க வேண்டும். ஆகவே மாணவர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகி உள்ளது.

தற்போது அந்த பள்ளியில் படிக்கும் மாணவர்கள் ‘தயவு செய்து தங்களுக்கு உதவுங்கள்’ என கோரிக்கை விடுத்து மத்திய அமைச்சர் சுஷ்மா சுவராஜூக்கு, சமூக வலைதளத்தில் மனு அனுப்பி வைத்துள்ளனர். இதற்காக ஆன்லைன் மூலம் 3300 பேரிடம் கையெழுத்து பெற்றுள்ளனர்.

இந்த நிலையில் அப்பள்ளியில் படிக்கும் பெற்றோர்கள் சிலரை தொடர்புகொண்டு பேசினோம்.

அவர்கள் தெரிவித்தாவது:

“இந்தப் பள்ளியில் 11 ஆயிரம் மாணவர்கள்  படிக்கிறார்கள். ஆசிரியர் உட்பட இதர ஊழியர்கள் 600 பேர் பணியாற்றுகிறார்கள். 150 பேருந்துகள் உள்ளன.

சி.பி.எஸ்.இ. பள்ளியான இது, சவுதியில் வாழும் இந்தியர்களுக்கு ஒரு வரப்பிரசாதம் ஆகும்.

இந்தப் பள்ளி ஆரம்பித்து ஐம்பது ஆண்டுகள் ஆகின்றன. அந்த இடத்துக்கான ஒப்பந்தம் முடிவுக்கு வந்தது. இதையடுத்து இடத்தின் உரிமையாளர், குறிப்பிட்ட இடத்தை  பள்ளி நிர்வாகத்துக்கே விற்பதற்கு முன் வந்தார். ஆனால் பள்ளி நிர்வாகத்தின் தரப்பில் அலட்சியமாக இருந்துவிட்டார்கள். குறிப்பாக இந்த பள்ளிக்கு கண்காணிப்பாளராக சவுதி இந்திய தூதரகத்தின் அதிகாரி ஒருவர் உண்டு. ஆனால் அந்த அதிகாரியோ, இந்திய தூதரகமோ இந்த விசயத்தை ஒரு பொருட்டாக எடுத்துக்கொள்ளவில்லை.

பள்ளி தரப்பில் இருந்து பதில் இல்லாததால், இட உரிமையாளர் வேறு ஒருவருக்கு விற்றுவிட்டார். சமீபத்தில் அவர் மரணமடைந்துவிட்டார்.

இடத்தை வாங்கிய புது உரிமையாளரும் பள்ளி நிர்வாகத்துக்கே இடத்தை விற்க தயாராக இருந்தார். ஆனால் அதற்கும் பள்ளி தரப்பில் இருந்து பதில் இல்லை. அதனால்தான் அவர் நீதிமன்றம் சென்றார். இப்போது அவர் பக்கம் தீர்ப்பாகிவிட்டது. பள்ளி கட்டிடத்தை நாளை அவரிடம் ஒப்படைக்க வேண்டும். இதற்கான நோட்டீஸ் பல நாட்களுக்கு முன்பே பள்ளி நிர்வாகத்துக்கு அளிக்கப்பட்டது. அப்போதும் நிர்வாகம் கண்டுகொள்ளவில்லை.

இப்போது நாளையுடன் கெடு முடிவடையும் நிலையில்,  மாணவிகளுக்கான பள்ளியிலேயே மாணவர்களுக்கும் வகுப்பு நடத்த இருப்பதாக அறிவித்திருக்கிறார்கள்.

இங்கு இருபாலர் பள்ளிகளுக்கு அனுமதி கிடையாது. ஆகவே காலையில் மாணவிகளுக்கும் மதியம்

இந்திய தூதரகத்தில் உள்ள முக்கிய அதிகாரி, பள்ளிக்கான கண்காணிப்பாளராக இருப்பார். அவர்  சில மாதங்களுக்கு முன் ஓய்வு பெற்றுவிட்டார். பள்ளியின் முக்கிய நிர்வாகியும் ஏற்கெனவே ஓய்வு பெற்றுவிட்டார்.

ஆகவே மிகவும் இக்கட்டான நிலை. சவுதியில் சட்டதிட்டங்களை கடுமையாக பின்பற்றுவார்கள். ஆகவே திடீரென பள்ளியை சிப்ட் முறையில் மாற்றுவதை அந்நாட்டு கல்வித்துறை அனுமதிக்குமா என்பதும் கேள்விக்குறிதான்.

இங்கு மாணவர்களுக்கு மாதம் சுமார் முன்னூறு ரியால் கட்டணம். மாதம்.. 33லட்சம் ரியால் வருகிறது. அதாவது சுமார்  சுமார் ஆறு கோடி ரூபாய். பள்ளி நிர்வாகத்திடம் நிறைய பணம் இருக்கிறது. இத்தனை நாட்களில் அதே இடத்தை வாங்கியிருக்கலாம். அல்லது வேறு இடத்தை வாங்கி பள்ளியை மாற்றியிருக்கலாம். ஆனால் எதுவும் செய்யவில்லை.

பள்ளி நிர்வாகம், சவுதி இந்தியத்தூதரகம் ஆகியவற்றின் அலட்சியத்தால் 11 ஆயிரம் இந்திய மாணவர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகி உள்ளது” என்று குமுறுகிறார்கள் பெற்றோர்கள்.