பிப்ரவரி 20ம் தேதி வரை இங்கிலாந்திலுள்ள இந்திய தூதரக சேவைகள் ரத்து..!

லண்டன்: பிப்ரவரி 20ம் தேதி வரை இங்கிலாந்திலுள்ள இந்திய தூதரக சேவைகள் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.

உலக நாடுகளிடையே பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வந்த கொரோனா வைரஸ், உருமாற்றம் அடைந்து அச்சுறுத்தி வருகிறது. இங்கிலாந்தில் கண்டறியப்பட்ட இந்த வைரஸ் பல நாடுகளுக்கும் பரவி உள்ளது.

இந் நிலையில் பிப்ரவரி 20ம் தேதி வரை இங்கிலாந்தில் உள்ள இந்திய தூதரகத்தின் சேவைகள் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. இது தொடர்பாக இங்கிலாந்தில் உள்ள இந்திய தூதரகம் கூறி உள்ளதாவது:

இங்கிலாந்தில் பரவி வரும் உருமாறிய கொரோனா வைரசை கட்டுப்படுத்த அரசு விதித்துள்ள தீவிர கட்டுப்பாடுகளை கருத்தில் கொண்டும், தூதரக சேவைகளை கோருபவர்களுக்கு உண்டாக கூடிய வைரஸ் பாதிப்பினை தடுக்கும் பொருட்டும், பிப்ரவரி 20ம் தேதி வரை இங்கிலாந்திலுள்ள இந்திய தூதரகத்தின் சேவைகள் ரத்து செய்யப்படுகிறது என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.