ரஷ்யா : கார் விபத்தில் பலியான இந்திய கால்பந்து ரசிகர்

சோச்சி

லகக் கோப்பை கால்பந்து 2018 போட்டிகளை காணச் சென்ற இந்திய ரசிகர் கார் விபத்தில் மரணம் அடைந்தார்.

உலகக் கோப்பை கால்பந்து 2018 போட்டிகள் ரஷ்யாவில் நடைபெற்று வருகிறது.    இந்தப் போட்டிகளைக் காண உலகெங்கும் இருந்து பல நாட்டு கால்பந்து ரசிகர்கள் ரஷ்யாவுக்கு வந்துள்ளனர்.   இந்தப் போட்டிகள் ரஷ்ய நாட்டின் சோச்சி நகரிலும் நடைபெறுகின்றன.

கால்பந்து போட்டிகளைக் காண வந்த இந்திய ரசிகர் ஒருவர் நேற்று சோச்சியில் நடந்த உருகுவே – போர்ச்சுகல் போட்டியைக் காண வாடகைக்கார் ஒன்றில் சென்றுள்ளார்.   ஆட்லர் மற்றும் கிரஸ்ன்யா இடையிலான மலைப்பாதையில் அந்த கார் சென்றுக் கொண்டு இருந்துள்ளது.

அப்போது வாடகைக் கார் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து தவறான பக்கத்துக்கு சென்று எதிரில் வந்த பஸ்ஸுடன் மோதி உள்ளது.  இதில் அந்தக் காரில் வந்த இந்தியர் சம்பவ இடத்திலேயே மரணம் அடைந்துள்ளார்.    அவருடன் வந்த மற்றொருவர் ஆபத்தான நிலையில் மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மரணம் அடைந்தவர் ஒரு இந்தியர் என்பதைத் தவிர வேறெந்த விவரமும் ரஷ்ய காவல்துறை இன்னும் தெரிவிக்கவில்லை.