ஆசிய விளையாட்டு போட்டி: இந்திய கால்பந்து அணிக்கு அனுமதி

ஆசிய விளையாட்டு போட்டிகளில் பங்கேற்க இந்திய கால்பந்து அணிக்கு அதிகாரப்பூர்வ அனுமதி கிடைத்துள்ளன. இந்திய கால்பந்து போட்டியின் தலைமை பயிற்சியாளர் ஸ்டீபன் கான்ஸ்டண்டைன் ஆசிய விளையாட்டு போட்டிகளில் பங்கேற்க இந்த மாதம் ஆரம்பத்தில் அனுமதி கேட்டிருந்தார். இதனை தொடர்ந்து இந்திய கால்பந்து போட்டியின் ஆண்கள் அணி ஆசிய விளையாட்டு போட்டிகளில் பங்கேற்க மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது.
footballa team
அதிகாரப்பூர்வ அனுமதியை இந்திய கால்பந்து சம்மேளனம் உறுதிப்படுத்தியுள்ளது. ஆண்கள் அணிக்கு மட்டும் அனுமதி வழங்கப்பட்டுள்ள நிலையில் பெண்கள் அணி அனுமதி கேட்டு காத்திருக்கின்றனர்.

”அதிக அளவிலான போட்டிகளில் பங்கேற்க உள்ளோம். மத்திய அரசு எங்களை கவனித்து வந்த நிலையில் தற்போது ஆசிய போட்டிகளில் பங்கேற்க அனுமதி வழங்கியுள்ளது. 23 வயதுக்குட்பட்டோருக்கான போட்டிகளில் பங்கேற்க 11 வீரர்கள் உள்ளனர். ஆசிய விளையாட்டு போட்டிகளில் பங்கேற்பதால் வீரர்களுக்கு அனுபவமும், நன்மையும் ஏற்படும். தற்போது தேர்வு செய்யப்பட்டுள்ள வீரர்கள் ஜூலை மாதம், நடைபெற உள்ள ஆசிய போட்டியில் பங்கேற்பார்கள்” என கால்பந்து போட்டியின் தலைமை பயிற்சியாளர் ஸ்டீபன் தெரிவித்துள்ளார்.

சர்வதேச விளையாட்டு போட்டிகளில் இரண்டாவது முறையாக போட்டியிடும் இந்திய அணிக்கான பிரச்சாரத்தில் ஸ்டீபன் ஈடுபட்டார், மும்பையில் நடைபெற்ற உச்சிமாநாட்டை தொடர்ந்து இந்தியா 2-0 என்ற புள்ளிகளில் கென்யாவை வெற்றிக்கொண்டது. இண்டர்காண்டினெண்டல் கோப்பைக்கான போட்டியில் பங்கேற்பது 2019ம் ஆண்டு துபாயில் நடைபெறும் போட்டிக்கான ஒரு துடுப்பு என்றே கூறலாம். ஜனவரி 5ம் தேதி முதல் பிப்ரவரி 1ம் தேதி வரை நடைபெறும் இண்டர்காண்டினெண்டல் போட்டிகளில் பங்கேற்க குரூப் ஏ அணியில் இடம்பெற்ற ஐக்கிய அமீர்கம், தாய்லாந்து மற்றும் பஹ்ரைன் அணிகளுடன் இந்தியாவும் இணைந்துள்ளன